பெங்களூரு, அக். 26: மனதிற்கு அழுத்தம் தராத பங்குகளை அறிமுகம் செய்ய சாம்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை சாம்கோ நிறுவனத்தின் நிறுவனரும், இயக்குநருமான ஜிமீத்மோடி செய்தியாளர்களிடம் கூறியது: பரஸ்பர நிதி உள்ளிட்ட பங்குகளில் முதலீடு செய்வதற்கு பலர் ஆர்வமாக உள்ளபோது, அதில் உள்ள ஆபத்துகளை உணர்ந்து, பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். பரஸ்பர நிதியில் முதலீடுகளை செய்துள்ள பலர், தங்களின் முதலீடுகள் திரும்ப வருமா என்ற அச்சத்தில் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு சாம்கோ நிறுவனத்தின் சார்பில் மனதிற்கு அழுத்தம் தராத, யாரும் அச்சம் கொள்ளாத வகையிலான பங்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். சாம்கோ நிறுவனம் பங்குகளை வெளியிட ஆர்பிஐ வங்கியின் அனுமதியை பெற்றுள்ளது. பங்குகள் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு பெங்களூரில் எங்களின் வர்த்தகத்தை பெருக்க முடிவு செய்துள்ளோம் என்றார். பேட்டியின் போது சாம்கோ நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் அனந்தராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ReplyForward
Kommentare