பெங்களூரு, ஆக. 9: திருவள்ளுவரை தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழி, ஜாதி, மதம் மறந்து கொண்டாட வேண்டும் என்று டாக்டர் பையப்பனஹள்ளி டி.ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பெங்களூரு அல்சூரில் உள்ள ஐயன் திருவள்ளுவர் சிலை நிறுவிய 15வது ஆண்டு நாள் விழாவையொட்டி நடை பெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளுவர் சிலைக்கு முன்னாள் மேயரும், பி.ஆர்.அம்பேத்கர் வளர்ச்சி கழகத்தின் தலைவர் சம்பத்ராஜ், தமிழ் ஆர்வலர் முனைவர் எஸ்.டி. குமார், விஸ்வகவி திருவள்ளூர் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதரன், துணை செயலாளர் சீனிவாசன், பொருளாளர் கோபிநாத், பெங்களூருத் தமிழ் சங்கத்தின் தலைவர் கோ. தாமோதரன், முன்னாள் தலைவர்கள் தி.கோ. தாமோதரன், ரா.சு. மாறன்,
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சிம்சன் சண்முகம், உரிமை குரல் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளையின் துணைத் தலைவர் காந்தன், ஐடிஐ தமிழ் மன்றத்தின் தலைவர் பாஸ்கரன், காங்கிரஸ் தலைவர்கள் நந்தகுமார், விஸ்வநாதன், ராஜசேகர், சீனிவாசன், பாஸ்கர், பார்த்திபன், தேவராஜ், பாரி, வெங்கடேஷ், ஜேடிஎஸ் சோமு உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
முற்றோதல் நிகழ்ச்சி அரண்மனை சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பையப்பனஹள்ளி ரமேஷ், திருவள்ளுவரை தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழி, ஜாதி, மதம் மறந்து கொண்டாட வேண்டும். அவரது குறலில் உலக மாந்தர்களுக்கான வாழ்வியலைப்பற்றி கூறப்பட்டுள்ளது. நமது வாழ்வு சிறக்க வேண்டும் என்றால், திருக்குறளை தவராமல் படிக்க வேண்டும் என்றார்.
முன்னாள் மேயரும், பி.ஆர்.அம்பேத்கர் வளர்ச்சி கழகத்தின் தலைவர் சம்பத்ராஜ், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தில் தமிழர்கள் சிறப்பாக வாழ்கின்றனர். நீண்ட நாட்களாக இங்கு வாழும் தமிழர்களை, கன்னடர்கள் என்றுதான் அழைக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட இடங்களில் வாழும் கன்னடர்கள் பாதுகாப்பான வாழ்கின்றனர் என்று முன்பு என்னை சந்தித்தப்போது தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார் என்றார்.
Comments