பெங்களூரு, ஜூலை 22: பெங்களூரு கத்தோலிக்க கிறிஸ்துவ மறைமாவட்ட துணை பேராயராக தமிழரான ஜோசப் சூசைநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு கத்தோலிக்க கிறிஸ்துவ உயர்மறைமாவட்டத்தின் பேராயராக பெர்னார்ட் மோரஸ் செயல்பட்டு வருகிறார். தேவாலயங்களில் பேராயரான பெர்னார்ட் மோரஸ் திருப்பலியை முன்னின்று நடத்தும்போது, அவருக்கு உதவி செய்வதற்காக துணை பேராயர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பெங்களூரு கத்தோலிக்க கிறிஸ்துவ உயர்மறைமாவட்ட தூணை பேராயராக பெங்களூரு, ரிச்மண்ட் சதுக்கத்தில் உள்ள புனித இருதய ஆலயத்தின் அருள்தந்தையாக பணியாற்றி வரும் தமிழரான ஜோசப் சூசைநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை ஜூலை 13ஆம் தேதி போப் ஆண்டவர் பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார். ஜோசப் சூசைநாதனுடன் ஆரோக்கியராஜ் சதீஷ்குமாரையும் உதவி பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோலார் தங்கவயலில் மறைந்த விசுவாசம் மற்றும் சூசைமேரி ஆகியோருக்கு 1964ஆம் ஆண்டு 14ஆம் தேதி மகனாக பிறந்தவர் ஜோசப் சூசைநாதன். பெங்களூரு கத்தோலிக்க கிறிஸ்துவ உயர்மறைமாவட்டத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆலயங்களில் 34 ஆண்டுகளாக ஆயராக பணியாற்றி வருகிறார். இது குறித்து அருள்தந்தை ஜோசப் சூசைநாதன் கூறுகையில்,"மக்களிடையே ஆன்மீகப்பணியாற்றுவதற்கு நல்ல வாய்ப்பு. மேலும், மக்களுக்க் நல்லவாய்ப்பு வாய்த்துள்ளது." என்றார். இதனிடையே, துணை பேராயராக நியமிக்கப்பட்டதற்கு ஜோசப் சூசைநாதனுக்கு மாலை அணிவித்து ரோஜர் புரொடக்ஷன் ஹவுஸ் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ரோஜர்ஸ் வாழ்த்து தெரிவித்தார். புனித இருதய ஆலயத்தின் உறுப்பினர்களும் பெருந்திரளாக திரண்டு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.
コメント