பெங்களூரு, அக். 26: மின் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் போல்ட் உபகரணம் ரெவோஸ் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது. பெங்களூரில் செவ்வாய்க்கிழமை ரெவோஸ் நிறுவனத்தின் சார்பில் மின்
வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் போல்ட் உபகரணத்தை அறிமுகம் செய்து வைத்து அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மோஹித்யாதவ் பேசியது: சர்வதேச அளவில் மின் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் மின் வாகனங்களுக்கு மின்சாரத்தை சார்ஜ் செய்யும் மையங்கள் குறைவாக உள்ளது. இதனால் மின் வாகனங்களை வாங்கியவர்களும் நெடும்தூரப் பயணங்களை மின் வாகனத்தில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மின் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் போல்ட் உபகரணம் அறிமுகம் செய்து வைத்துள்ளோம். இதனை வீடுகள், கடைகள் முன்பும் அமைக்கும் வகையில் எளிமையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 3 ஆயிரமாகும். அறிமுக சலுகை விலையாக அக். 29-ஆம் தேதி முதல் டிசம்பர் மாத இறுதி வரை 1 ரூபாய்க்கு இந்த உபகரணத்தை வழங்க முடிவு செய்துள்ளோம். ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தி இந்த உபகரணத்தில் மின்சாரத்தை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்தியாவில் 60 நகரங்களில் போல்ட் உபகரணத்தை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை செய்துள்ளோம். 3600 கிலோவாட் வரையிலான மின்சாரத்தை சேமித்து, செலுத்தும் வகையில் போல்ட் உபகரணம் உள்ளது என்றார். நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ReplyForward
Comments