பெங்களூரு, பிப். 16: பெங்களூரு மான்யதா தொழில்நுட்ப பூங்கா அருகே ரூ. 183 கோடி செலவில் மேம்பாலத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.
பெங்களூரு மான்யதா தொழில்நுட்ப பூங்கா அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் எம்பஸி குழுமத்தின் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை சார்பில் ரூ. 183 கோடி செலவில் வீரண்ணபாளையத்திலிருந்து ஹெப்பாள் இடையே 1 கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்ட மேம்பாலத்தை செவ்வாய்க்கிழமை முதல்வர் பசவராஜ் பொம்மை பொதுமக்கள் சேவைக்கு திறந்து வைத்தார்.
இதில் கலந்து கொண்ட எம்பஸி குழுமத்தின் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளையின் தலைவர் ஜித்துவீர்வாணி பேசியது: வீரண்ணபாளையத்திலிருந்து ஹெப்பாள் இடையே மான்யதா தொழில்நுட்ப பூங்கா அருகே கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தின் மூலம் தொழில்நுட்ப பூங்காவில் உள்ள அனைத்து பெரும் நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயனிக்க பலனுள்ளதாக இருக்கும். மேலும் விரைவில் சேவை தொடங்க உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கும் இந்த மேம்பாலம் பயனுள்ளதாக இருக்கும். எம்பஸி குழுமத்தின் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை தனியார் பங்களிப்பில் அரசுடன் இணைந்து இது போன்று பல்வேறு திட்டங்களை எதிர்க்காலத்தில் செயல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. எம்பஸி குழுமத்தின் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 400 கோடி முதலீட்டில் சமூகநலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்றார்.
Comments