முதலீட்டாளர்கள் வர்த்தகத்துடன் சமூக சேவையிலும் ஈடுபட வேண்டும்: முன்னாள் முதல்வர் சதானந்தகௌடா
- Dhina mani
- Apr 14, 2022
- 1 min read

பெங்களூரு, ஏப். 14: முதலீட்டாளர்கள் வர்த்தகத்துடன் சமூக சேவையிலும் ஈடுபட வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்தகௌடா தெரிவித்தார்.
பெங்களூரு ஜெயநகர் 5-வது பிளாக், 9-வது முக்கியச்சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற என்.லக்ஷ்மிநாராயணாசேத் ஆபரணமாளிகை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய அளவில் வைரம், தங்கம் உள்ளிட்ட ஆபரணமாளிகை அதிக அளவில் திறக்கப்படுகிறது. தேசிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக பெங்களூரு திகழ்கிறது.

இந்த நிலையில் மங்களூரில் புகழ்பெற்ற என்.லக்ஷ்மிநாராயணாசேத் ஆபரணமாளிகையின் கிளை பெங்களூரிலும் திறப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற பல ஆபரணமாளிகை மாநகரின் மற்ற இடங்களிலும் திறக்க வேண்டும். காரணம் பெங்களூரின் மக்கள் தொகை 1.2 கோடியாக உள்ளது. அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் உள்ள ஆபரணமாளிகைக்கு வந்த நகைகளை வாங்க முடியாது. எனவே பல ஆபரணமாளிகையை திறந்தால், அனைவரும் சிறந்த, நவீன வடிவமைப்பு உள்ள நகைகளை வாங்குவதற்கு எளிதாக இருக்கும். அண்மைகாலமாக தங்க, வைர நகைகள் மீது முதலீடு செய்வதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே மக்களின் தேவையை புரிந்து கொண்டு நகைகளை வடிவமைத்து விற்பனை செய்ய வேண்டும்.

சேத் குடும்பத்தினர் வர்த்தகத்தோடு நில்லாமல், சமூக சேவையிலும் சிறந்து விளங்குகின்றனர். வர்த்தகத்தையும், சமூக சேவையையும் ஒருங்கிணைந்து செய்வதில் அவர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர்களைப் போல மாநிலத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் அனைவரும் வர்த்தகத்துடன், சமூக சேவையையும் இணைந்து செய்ய வேண்டும். பெங்களூரு ஜெயநகரில் தொடங்கி உள்ள என்.லக்ஷ்மிநாராயணாசேத் ஆபரணமாளிகைக்கு மக்கள் அமோக ஆதரவு அளிக்க வேண்டும். வர்த்தகர்கள் வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாநில இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜனீஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments