பெங்களூர், மே 8: இளம் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளராகவும் மாறிய பிரனய் பாட்டீல் எழுதிய விண்டர்ஸ் இன் ஐரோப்பா என்ற புத்தகத்தை பிரபல பத்திரிகையாளர், பத்மஸ்ரீ விருது பெற்றவரருமான ராஜ்தீப் சர்தேசாய் வெளியிட்டார்.
பெங்களுரு ஹிக்கீம்பாத்ம்ஸில் சனிக்கிழமை ராஜ்தீப் சர்தேசாய் வெளியிட்டார். புத்தகத்தை பெற்றுக் கொண்ட பின்னர் பிரனாய் பாட்டீல் பேசியது: நான் முதன்முறையாக எழுதிய பர்கண்டி விண்டர்ஸ் என்பது வருத்தம், மன ஆரோக்கியம் மற்றும் மீட்பு போன்ற வலுவான கருப்பொருள்களைக் கொண்ட காதலாகும். புத்தகத்தில் முக்கிய கதாபாத்திரமான ஜேஸ் டேனரின் கதையை கூறுகிறது. அவர் பெயர், புகழ் உள்ளிட்ட அனைத்தையும் கொண்ட பிரபலமான அவரை, ஆழ்ந்த குற்றவுணர்விற்கு இட்டுச் செல்கிறது. வருத்தத்தின் மேகங்கள் அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் நிழலாடுகிறது. புத்தகம் மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆழமாக மூழ்கியுள்ளது. நாம் அனைவரும் தவறு செய்கிறோம். ஆனால் பலர் விஷயங்களைச் சரியாகச் செய்ய இரண்டாவது வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஒரு புதிய தொடக்கம் எப்படி வாழ்க்கையை மாற்றும் என்பதை புத்தகம் கோடிட்டு காட்டுகிறது. அவரது சகோதரி பேர்லின் அன்பு மற்றும் ஆதரவுடன், ஜேஸ் டேனர் மறுவாழ்வில் நுழைவதுதான் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கரு.நான் இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்த காலத்தில் முதல் கரோனா பொதுமுடக்கம், ஏனென்றால் நான் அப்போது உதவியற்ற உணர்வை அனுபவித்தேன். பலர் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். நான் நேசித்தவர்கள், வைரஸுக்கு அடிபணிந்தவர்கள் ஒரு நாளைக்கு உணவு சாப்பிட முடியாமல் திணறினர்.அது போன்ற சிலருக்கு நான் உணவளிப்பதன் மூலம் உதவ முயற்சித்தேன். அனைவருக்கும் பொருட்கள், மருந்துகள் போன்றவை போதாது என்று உணர்ந்தேன். அப்போதுதான் புத்தகம் எழுத முடிவு செய்தேன். பர்கண்டி விண்டர்ஸ் இன் ஐரோப்பாவில் மூலம் கிடைக்கும் லாபம், தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவது என முடிவு செய்துள்ளேன். எனது புத்தகத்தின் மொழி மிகவும் எளிமையானது மற்றும் கதை தொடர்புடையது. உணர்ச்சிகளின். இந்த புத்தகம் போதை, குற்ற உணர்வு, துஷ்பிரயோகம் மற்றும் காதல் ஆகியவற்றை அறிந்த அனைவருக்குமானது என்றார். நிகழ்ச்சியில் பூஜா பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comentários