பெங்களூரு, நவ. 19: புதுமையான வீட்டுத் தீர்வுகளை செயின்ட் கோபைன் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை செயின்ட் கோபைன் சார்பில் மைஹோம் வரம்பில் புதுமையான வீட்டுத் தீர்வுகளுக்கான திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன் மூலம் வடிவமைப்பு யோசனைகள் முதல் தனிப்பயனாக்கப்பட்ட உற்பத்தி, விற்பனைக்குப் பிந்தைய சேவை, வீடுகளுக்கான இறுதி முடிவுகள் உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் 3 முதல் 5 ஆண்டுகளில் வீட்டுத் தீர்வுகள் வணிகத்தின் மூலம் ரூ. 1,000 கோடி வரை வருவாய் கிடைக்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மொத்த கட்டிட கட்டுமானத் துறையில் 80 சதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்ட மிகப்பெரிய பிரிவாக குடியிருப்பு மற்றும் வீடுகள் சந்தை உள்ளது. இருப்பினும் வீட்டுத் தீர்வுகள் சந்தை ஒழுங்கமைக்கப்படாமல் உள்ளது, இதன் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர் கொள்கின்றனர். செயின்ட் கோபைன் முழு செயல்முறையையும் எண்ம மயமாக்குவதன் மூலம் வீட்டு தீர்வுகள் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. நிலையான கட்டுமானப் பொருட்களில் உலகளாவிய தரமான வடிவமைப்புகள், தயாரிப்புகள், சேவைகளை வழங்குவதில் செயின்ட் கோபைன் சிறந்து விளங்குகிறது.
புதிய திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விண்டோஸ், ஷவர் க்யூபிகல்ஸ், சீலிங்ஸ், சமையலறை, வார்ட்ரோப் ஷட்டர்கள், ரூஃபிங் தயாரிப்புகள், கண்ணாடிகள் போன்ற தயாரிப்புகளுக்கான தீர்வுகளை வழங்குகிறது. தீர்வுகளின் முழு தொகுப்பையும் ஒரே கூரையின் கீழ் வழங்குவதன் மூலம் நுகர்வோருக்கு வீட்டு வாசலில் அதிநவீன தொழில்நுட்பங்கள், தீர்வுகளை வழங்குவதை செயின்ட் கோபைன் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Commentaires