பெங்களூரு, டிச. 22: கேடலிஸ்ட், கெட் பெட்டர் அட் கெட்டிங் போன்ற புத்தகங்களால் புகழ்பெற்ற மறைந்த சந்திரமௌலி வெங்கடேசனின் 3-வது புத்தகமான
டிரான்ஸ்ஃபார்ம், அவர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதற்கு முன்பாக எழுதி முடிக்கப்பட்டதாகும். மக்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்த உதவுவதற்காக அவர், எழுத விரும்பிய நீண்ட தொடர் புத்தகங்களின் ஒரு பகுதியாக இது இருந்தது. பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய புத்தகத்தில், மௌலி எப்போதும் போல சிறப்பாகச் செய்துள்ளார், மக்கள் மேலாண்மை என்னும் முக்கியமானத் திறனின் மூலம் வளர்வதற்கும், மேம்படுவதற்குமான மிக முக்கியமான வழிகளை எடுத்துக் காட்டுகிறார். ஏசியன் பெயிண்ட்ஸ், ஒனிடா, மாண்டலெஸ் (இதற்கு முன்பாக கேட்பரி என்று அழைக்கப்பட்டது)
மற்றும் பிடிலைட் போன்ற நிறுவனங்களில் 29 ஆண்டு காலம் பணியாற்றிய நிரூபிக்கப்பட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரரான மௌலி, பல துறைகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளார். மேலும் இந்த புத்தகத்தில் அவர் வழங்கியுள்ள நுண்ணறிவுகள் மூலம் தனது அனுபவத்தை உயிர்ப்பித்துள்ளார்.
மௌலி தனது பணிக்காலத்தில், அனைத்துத் தொழில்களிலும் மக்கள் மேலாண்மைத் திறன் என்பது உலகளாவிய தேவையாக இருப்பதையும், ஒரு நபரை வெற்றிபெறச் செய்வதில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதையும் கண்டறிந்தார். உயர்மட்டத்தில் உள்ளவர்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் திறமையானவர்களாகவோ அல்லது ஆக்கப்பூர்வமானவர்களாகவோ
இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் அவர் கண்டறிந்தார், ஒருவரின் வாழ்க்கை, பணியில் வெற்றியை அடைவதற்கான நான்கு முக்கிய தூண்களில் ஒன்றாக மக்கள் மேலாண்மையை அவர் கருதினார்.
மக்கள் மேலாண்மையை தலைவர்கள் மற்றும் மேலாளர்கள் மேற்கொள்ளும் செயல்களாக நாம் கருதுகிறோம், மேலும் நம்மில் பலர் ஒரு நாள் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறோம். இருப்பினும், மௌலியின் எழுத்து நடை, தலைமைத்துவம் மற்றும் மேலாண்மை போன்றவை, அக்கருத்துகளை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது. அவை உண்மையில் இயற்கையாக ஒரு ஒற்றைப் பரிமாணம் இல்லை என்பதை விளக்குகிறது. இந்த புத்தகம் மௌலியின் மேனேஜ் என்ற மேம்பாட்டுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த புத்தகம் நம்மிடம் உள்ள சில பொய்யான நம்பிக்கைகளை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது தலைவர்கள் என்பவர் தலைமை நிர்வாக அதிகாரியைப் போல தங்களது பாத்திரத்தில் கட்டமைக்கப்பட்ட தலைமைத்துவம் கொண்டவர்கள் மட்டுமே என்பதுதான். உண்மையில், உங்கள் பணி எதுவாக இருந்தாலும், உங்கள் செயல்கள் ஒரே நேரத்தில் வழிநடத்தவும் நிர்வகிக்கவும் ஏற்றவாரு இருக்க வேண்டும் என்று அவர் தெரிவிக்கிறார். டிரான்ஸ்ஃபார்ம் வேறுபடுத்துவது என்னவென்றால், மௌலி தனது வாசகர்களுக்காக ஒரு நடைமுறை வேலைத் திட்டத்தை உருவாக்கியுள்ளார். புத்தகத்தில் உள்ள சில எளிய பயிற்சிகளை கடுமையாக மேற்கொள்வதன் மூலம், ஒருவர் தனது வாழ்க்கையை அணுகும் விதத்தில் நடத்தை மற்றும் செயல் அடிப்படையிலான மாற்றங்களை மேற்கொள்வதைக் கற்றுக்கொள்ளலாம்.
புத்தகம் குறித்து,ஈபிஎல்லின் நிர்வாக இயக்குநர் மற்றும் செயல் அதிகாரி ஆனந்த் க்ரிபாலு, நான் அறிந்த சிறந்த படைப்பாளிகளில் மௌலியும் ஒருவர். இளம் மேலாளர்கள் கார்ப்பரேட் ஏணியில்வேகமாக முன்னேற உதவுவதற்காக, மக்கள் மேலாண்மை பற்றிய நுண்ணறிவுகளை இப்புத்தகம் பகிர்கிறது. புத்தகம் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் அதைப் படிப்பவர்களின் வாழ்க்கையை விரைவுபடுத்தும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
பிட்சமின் டீன் டாக்டர் ரஞ்சன் பானர்ஜி, உங்களை நீங்கள் எவ்வாறு
வளர்த்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பற்றி பேசுவதற்கான
தனித்துத்திறனை மௌலி கொண்டுள்ளார. தெளிவானதாகவும், செயல்படுத்தக்கூடியதாகவும், எளிமையானதாகவும் திகழும் இதை ஆர்வமுள்ள அனைவரும் படிக்க வேண்டும் என்றார்.
நுண்ணறிவும் நடைமுறைத்தன்மையும் ஒருங்கிணைந்த இந்த டிரான்ஸ்ஃபார்ம் புத்தகம், தலைமை மற்றும் மேலாண்மை பற்றிய ஒரு விரிவான புத்தகமாகும், இது பெருநிறுவன வெற்றிக்கான வாய்ப்புகளை மேம்படுத்த பல முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது என்பது பெரும்பாலனார்களின் கருத்தாகும்.
Comments