top of page
Search
Writer's pictureDhina mani

பிஜிஎஸ் கிளெனீகிள் குளோபல் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை


பெங்களூரு, மார்ச் 17: பிஜிஎஸ் கிளெனீகிள் குளோபல் மருத்துவமனை 640-க்கும் அதிகமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து வியாழக்கிழமை பிஜிஎஸ் கிளெனீகிள் குளோபல் மருத்துவமனையின் மூத்த சிறுநீரக மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்அனில் குமார் கூறியது: உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை திட்டங்கள் கரோனா தொற்றால் பெரும் பின்னடைவை சந்தித்தன. தொற்றின் உச்சக்கட்டத்தின் போது மாற்று அறுவை சிகிச்சை எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. கரோனாவின் விளைவுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் மறைமுக விளைவு, மாற்று அறுவை சிகிச்சை பெறுபவர்கள் தங்கள் வழக்கமான வருகைகளை தவிற்த்தனர். உயிர்காக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை சரியான நேரத்தில் பெறவில்லை. அவர்களில் சிலர் மருத்துவமனைக்கு வருவதை நிறுத்தியதால், அவர்களின் சிறுநீரகளின் செயல்பாடுகளை மோசமாக்கின. மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாகியது. எங்களுடைய நோயாளிகள் தொலைத்தொடர்பு மூலம் 24 மணி நேரமும் இணைக்கப்பட்டு, மருந்துகள் கிடைப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. தொற்றுநோய்க்கு மத்தியில் 2021 ஆம் ஆண்டில் 70 மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ய முடிந்தது. அவர்களில் 22 பெறுநர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் கரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்ட பிறகு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர், 4 ஜோடிகளுக்கு ஸ்வாப் மாற்று மற்றும் 4 ஏபிஓ இணக்கமற்ற மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன என்றார்.

பிஜிஎஸ் கிளெனீகிள் குளோபல் மருத்துவமனையின் மூத்த சிறுநீரக மருத்துவர் மற்றும் தலைமை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் நரேந்திரா கூறியது: கரோனா தொற்றால் இங்குள்ள நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, வெளிநாடுகளில் உள்ளவர்கள் எல்லைகள் திறப்பதற்காக‌ பல மாதங்கள் காத்திருக்க நேர்ந்தது. சிறுநீரகத்திற்காக எங்களைச் சந்திக்கும் சர்வதேச நோயாளிகளுக்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. பல நாடுகளில் மாற்று அறுவை சிகிச்சை வசதிகள் இல்லை என்பதால் அவர்கள் இங்கு பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாற்று அறுவை சிகிச்சை, டயாலிசிஸுடன் ஒப்பிடும் போது அனைத்து இறுதி நிலை சிறுநீரக நோயாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயிர்வாழ்வையும் மேம்படுத்துகிறது. நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை நோய்களால் வயதான மற்றும் இளைஞர்க‌ளிடையே சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று அனைவரையும் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. தொடர்ந்து உட்கார்ந்த பணியாற்றும் வாழ்க்கை முறை, மோசமான உணவு, மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை பலரை சிறுநீரக நோயாளிகளாகவும், மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கும் தள்ளப்படுகின்றனர். மேம்பட்ட வாழ்க்கை முறை மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவை சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடிகளாக‌ நாங்கள் உள்ளோம். அதிக வெற்றி விகிதங்களுடன் கிட்டத்தட்ட 640க்கும் மேற்பட்ட‌ சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளோம் என்றார்.

115 views0 comments

Comentários


Post: Blog2_Post
bottom of page