top of page
Search

பெங்களூரில் பெப்பர்ஃப்ரை சார்பில் 2 புதிய ஸ்டுடியோக்கள் தொடக்கம்

  • Writer: Dhina mani
    Dhina mani
  • Mar 10, 2022
  • 1 min read

பெங்களூரு, மார்ச் 10: இந்தியாவின் நம்பர்.1 மரச்சாமான்கள் மற்றும் வீட்டுப் பொருட்கள் சந்தையான பெப்பர்ஃப்ரை, பெங்களூரில் 2 புதிய ஸ்டியோக்களை தொடங்கியுள்ளது.

2014-இல் தனது முதல் ஸ்டுடியோவைத் தொடங்கிய பெப்பர்ஃப்ரை தற்போது நாட்டில் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 100க்கும் மேற்பட்ட ஸ்டுடியோக்களைக் கொண்டுள்ளது. பெப்பர்ஃப்ரையின் மிகப்பெரிய சந்தையாக விளங்கும் தென்னிந்தியாவில், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மங்களுரு, கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோயம்புத்தூர், விசாகப்பட்டினம், மதுரை, கோட்டயம், கொல்லம், சேலம், குல்பர்கா, திருச்சி, வேலூர், செகந்திராபாத், விஜயவாடா மற்றும் சித்தூர் ஆகிய இடங்களில் 35 ஸ்டுடியோக்கள் உள்ளன.

பெங்களூரில் 2 புதிய ஸ்டுடியோக்கள் எலக்ட்ரானிக் சிட்டி, பட்டரஹள்ளி ஆகிய இடங்களில் முறையே 1000 மற்றும் 400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளன. 2 ஸ்டுடியோக்களும் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள எஸ்எஸ்விஆர் எண்டர்பிரைசஸ் மற்றும் பத்தரஹள்ளியில் உள்ள ஹரிதா எண்டர்பிரைசஸ் உடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளன. லட்சத்திற்கும் அதிகமான தயாரிப்புகளின் வேறுபட்ட பிரிவுகளிலிருந்து கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மரச்சாமான்கள் மற்றும் அலங்காரப் பொருள்களின் வரிசைப்படுத்தப்பட்ட வரம்பின் முதல் அனுபவத்தை ஸ்டுடியோஸ் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த ஸ்டுடியோக்கள், பொருட்களை வாங்குவதற்கு முன் மரப்பூச்சுகள் மற்றும் அவற்றின் தரம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கான தொடுதல் அனுபவத்தை நுகர்வோருக்கு வழங்குகிறது. இதன் மூலம் நுகர்வோர் அவர்களின் கனவு இல்லங்களை உருவாக்க உதவுகிறது.

இது குறித்து பெப்பர்ஃப்ரையின் வணிகத் தலைவர் அம்ருதா குப்தா கூறியது: எஸ்எஸ்விஆர் எண்டர்பிரைசஸ் மற்றும் ஹரிதா எண்டர்பிரைசஸ் உடன் இணைந்து பெங்களூரில் 2 புதிய ஸ்டுடியோக்களை தொடங்குவதன் மூலம் எங்களின் தடத்தை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம், இப்போது நகரத்தில் 13 பெப்பர்ஃப்ரை ஸ்டுடியோக்கள் உள்ளன. பெப்பர்ஃப்ரையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையில் பல்வேறு வகைகளை வழங்குவதே எங்கள் நோக்கம். எங்கள் ஸ்டுடியோக்கள் நுகர்வோருக்கு ஒரு சிறந்த வீட்டை உருவாக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

எஸ்எஸ்விஆர் எண்டர்பிரைசஸ் உரிமையாளர்களான வைஷ்ணவி சுப்ரமணியம் மற்றும் குருபிரசாத் சௌந்தர்ராஜன் கூறியது: நாங்கள் 2019-ஆம் ஆண்டு முதல் பெப்பர்ஃப்ரையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். மேலும் கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் 2 பெப்பர்ஃப்ரை ஃப்ரான்சைஸிகளை வைத்திருக்கிறோம். இது பெப்பர்ஃப்ரையுடன் எங்களின் 3வது ஃபிரான்சைஸ் ஸ்டுடியோவாகும், மேலும் இந்தியாவின் முன்னணி வீடு மற்றும் தளவாடங்கள் சந்தையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றனர்.

ஹரிதா எண்டர்பிரைசஸ் விமல் குமார் ஜெயின் உரிமையாளர், பங்குதாரர் கூறியது: பெப்பர்ஃப்ரையுடன் கூட்டு சேர்ந்து, இந்தியாவில் மரச்சாமான்கள் மற்றும் வீட்டுப் பொருட்கள் பிரிவில் மிகப் பெரிய வணிகத்தை உருவாக்குவதற்கான அவர்களின் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.


 
 
 

Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Bangalore Dhinamani Daily. Proudly created with Wix.com

bottom of page