பெங்களூரு, அக். 22: பெங்களூரில் ஜெர்மன் பாரம்பரிய நோபிலியா நவீன சமையலறை அனுபவ மையம் தொடக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ஹென்னூர் முக்கியச்சாலையில் வெள்ளிக்கிழமை ஜெர்மன் பாரம்பரிய நோபிலியா நவீன சமையலறை அனுபவ மையத்தை திறந்து வைத்து ப்ரிஸம் ஜான்சன் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் சர்மா பேசியது: பெங்களூருவில் உள்ள நோபிலியா நவீன சமையலறை அனுபவ மையம் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது. ஜான்சனின் உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளை இங்கு வழங்கப்படும். ப்ரிஸம் ஜான்சன் நிறுவனம் கூடுதலாக சமையலறை வணிகத்தில் கவனம் செலுத்தி வருகிறது, அதன் பன்முகப்படுத்தப்பட்ட வணிகங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி இதனை சாத்தியமாக்கி உள்ளது. பெங்களூரு மட்டுமின்றி தேசிய அளவில் முக்கிய நகரங்களில் உயர்தர ஆடம்பர தயாரிப்புகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிவு செய்துள்ளோம். பெங்களூருவில் ஹெச்என்ஐ பிரிவுக்கு தீர்வு சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதில் நல்ல திறன் கொண்ட ஒரு ஆர்வமுள்ள தொழில்முனைவோர் பிரணீத் ரெட்டியையுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த வாய்ப்பைத் தழுவி, ப்ரிஸம் ஜான்சன் நிறுவனம் இந்தியாவில் நவீன சமையலறைகளின் வளர்ச்சிக்கான பெரும் பங்களிப்பை வழங்க திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் நுகர்வோர் நடைமுறை தீர்வுகளைத் தேடுவது மட்டுமல்லாமல் வாழ்க்கை முறை, வடிவமைப்பு மற்றும் வசதிக்காக சமமான முக்கியத்துவத்தை அனைவருக்கும் அளிக்க விரும்புகிறோம். நோபிலியா 2013-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 3 ஆயிரம் நவீன சமையலறைகளை உருவாக்கி உள்ளோம். தற்போது, இந்தியாவில் மும்பை, புணே, சென்னை, இந்தூர், பெங்களூரில் 5 சமையலறை அனுபவ மையங்கள் உள்ளன. டிசம்பர் இறுதிக்குள் அகமதாபாத், ஜெய்ப்பூரில் நோபிலியா நவீன சமையலறை அனுபவ மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
Comments