top of page
Search

பிக்பஜார் ஷாப்பிங் திருவிழாவில் கொள்முதல் செய்தால் உறுதியான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசு

  • Writer: Dhina mani
    Dhina mani
  • Oct 27, 2021
  • 1 min read

பெங்களூரு, அக். 27: பிக்பஜார் ஷாப்பிங் திருவிழாவில் கொள்முதல் செய்தால் உறுதியான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை பரிசாக பெற முடியும் என்று ஃபியூச்சர் குரூப், டிஜிட்டல், மார்க்கெட்டிங் மற்றும் இ-காமர்ஸ் மூத்த மேலாண் அதிகாரி பவன் சர்தா தெரிவித்தார். இது குறித்து புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய அளவிலான பிக்பஜார் விற்பனை மையங்களில் அக். 23-ஆம் தேதி தொடங்கி, நவ. 7-ஆம் தேதி வரை ஷாப்பிங் திருவிழா நடைபெறகிறது. வாடிக்கையாளர்கள் நேரிலும், பிக்பஜார் செயலி, இணையவழி shop.bigbazaar.com இணையதளத்திலும் ஷாப்பிங் செய்யும் போது, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களைப் பரிசாக பெறுவார்கள். பிக் பஜார், இந்தியாவின் விருப்பமான வெரைட்டி டிபார்ட்மென்ட் ஸ்டோர், தீபாவளி ஷாப்பிங் அனுபவத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு மங்களகரமானதாகவும், செழிப்பாகவும் மாற்றுவதற்காக பிக்பஜார் ஷாப்பிங் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஷாப்பிங்கின் போது உறுதிசெய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர் தங்கள் ஷாப்பிங்கின் உண்மையான மதிப்பைப் பெறுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் அனைத்து பண்டிகைத் தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் ஷாப்பிங் செய்யக்கூடிய வகையில் அனைத்து வகைகளிலும் பரந்த அளவிலான வரம்பை வழங்குவதை உறுதிசெய்துள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய 2 மணி நேரத்தில் அனைத்து வகைகளையும் நாங்கள் வீட்டிற்கு வழங்குகிறோம். மாலை விருந்துக்கு ஃபேஷன், அண்டை வீட்டாருக்கு இனிப்புகள், சாக்லேட் பெட்டிகள், அனைத்து தரப்பினருக்குமான புதிய கண்ணாடி பொருட்கள், சமையலறைக்கு புதிய கேஸ்டோவ் உள்ளிட்டவைகளை இந்த தீபாவளிக்கு வரிசைப்படுத்தி விற்பனை செய்து வருகிறோம். டிரீம்லைன், ரேமண்ட் டபுள் பெட் ஷீட் செட் உடன் ஒருங்கிணைந்த தலையணை உறைகள் ரூ 1,999க்கு வாங்கினால் 1 இலவசமாக வழங்கப்படும். சாக்லேட்டுகளில் 2 வாங்கினால் 1 இலவசம். ஆனந்த், பால் மற்றும் ஹெரிடேஜ் நெய் லிட்டருக்கு ரூ. 398 மட்டுமே. கார்மிக் பாதாம் (500 கிராம்) + முந்திரி (400 கிராம்) விலை ரூ 839 மட்டுமே என்றார்.

ReplyForward

 
 
 

Comentários


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Bangalore Dhinamani Daily. Proudly created with Wix.com

bottom of page