நவ. 1ல் கர்நாடக மாநில திமுக சார்பில் கர்நாடக உதய தின விழா
- Dhina mani
- Oct 25, 2022
- 1 min read

பெங்களூரு, அக். 25: கர்நாடக மாநில திமுக சார்பில் நவ. 1 ஆம் தேதி கர்நாடக உதய தின விழா வெகு சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நவம்பர் 1 ம் தேதி காலை 9 மணிக்கு பெங்களூர் ஸ்ரீராமபுரம் ராமச்சந்திரபுரத்தில் உள்ள மாநில திமுக கலைஞரகம், தளபதி மு க ஸ்டாலின் மணிவிழா அரகத்தில் கர்நாடக உதய தின விழா நடைபெறுகிறது. கர்நாடக மாநில திமுக துணை அமைப்பாளர் ஜி.ராமலிங்கம் அனைவரையும் வரவேற்று பேசுகிறார். கர்நாடக மாநில திமுக அவைத்லைவர் மொ.பெரியசாமி தலைமை தாங்குகிறார். கர்நாடக மாநில திமுக பொருளாளர் தட்சிணாமூர்த்தி அனைவருக்கும் இனிப்பு வழங்குகிறார்.

இந்த விழாவில் கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாணவர் அணி, இலக்கிய அணி, மகளிர் அணி, தொமுச பேரவை கிளைக் கழகம் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று கர்நாடக மாநில கழக அமைப்பாளர் ந.ராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
Comentários