பெங்களூரு, நவ. 1: நாராயண நேத்ராலயாவில் வெற்றிகரமான கார்னியல் மாற்று அறுவை சிகிச்சையை மூலம் தானமாக பெறப்பட்ட நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்களின் பாகங்கள் மூலம் 4 பேருக்கு பொருத்தப்பட்டது.
இது குறித்து நாராயண நேத்ராலயாவில் தலைவர் மருத்துவர் புஜங்கஷெட்டி திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: அண்மையில் மாரடைபால் காலமான நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. தானமாக பெற்றப்பட்ட அவரது கண்களின் பாகங்களை 4 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. அவர்களுக்கு விரைவில் பார்வை கிடைக்க உள்ளது. ஏற்கெனவே நடிகர் ராஜ்குமார் இறந்தப்போது, அவரது கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர். தற்போது நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களது குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தானமாக பெறப் பட்ட ஒரு கண்ணின் பாகங்கள் மூலம் 2 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்படுகிறது.மேலோட்டமான கார்னியல் பாதிப்பு, ஆழமான கார்னியல் பாதிப்பு உள்ளவர்களுக்கு தானம் பெறப்பட்ட கண்களின் பாகங்களை எடுத்து அறுவை கிச்சை மூலம் பொறுத்தப்படுகிறது. ஆழமான முன்புற லேமல்லர் கெரடோபிளாஸ்டி (DALK) - கார்னியாவின் வெளிப்புறம், மேலோட்டமான பகுதிகார்னியல் டிஸ்டிராபி, கெரடோகோனஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 2 இளம் நோயாளிகளுக்கு தானம் பெற்றப் பட்ட ஒரு கண்ணின் பாகம் இடமாற்றம் செய்யப்பட்டது. டெஸ்செமெட்டின் ஸ்டிரிப்பிங் எண்டோடெலியல் கெரடோபிளாஸ்டி (DSEK), ஆழமான அடுக்கு கார்னியா எண்டோடெலியல் டிகம்பென்சேஷன் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட 2 நோயாளிகளுக்கு கார்னியா இடமாற்றம் செய்யப்பட்டது. நடிகர் புனித் கண்களை தானம் செய்ததால், 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. எதிர்பாராதமாக இறப்பவர்கள், விபத்துகளால் இறப்பவர்களின் கண்கள், உடல் உறுப்புகளை தானம் செய்ய அனைவரும் வர வேண்டும். இது குறித்து அரசு மட்டுமின்றி தனியார்களும் விழைப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அறுவை சிகிச்சைகள் மருத்துவர்கள் யதீஷ் சிவன்னா,ஷரோன் டி'சோசா, ஹர்ஷா நாகராஜ், ரோஹித் ஷெட்டி, கைரிக் குண்டு, வீரேஷ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது என்றார்.
Comments