top of page
Search

நடிகை ஸ்ருதி ஹாசன் பார்கோஸ்.காம் இணையதளச்சேவையை தொடக்கி வைத்தார்

  • Writer: Dhina mani
    Dhina mani
  • Oct 20, 2021
  • 1 min read

ree

பெங்களூரு, அக். 20: ஆடம்பரமான வாசனை திரவியங்கள், அழகு மற்றும் ஆரோக்கிய தயாரிப்புகளின் விற்பனைக்கான பார்கோஸ்.காம் இணையதளச்சேவையை செவ்வாய்க்கிழமை நடிக்கை ஸ்ருதி ஹாசன் தொடக்கி வைத்தார். 2004-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பார்கோஸ், ஆடம்பரமான வாசனை திரவியங்கள், அழகு மற்றும் ஆரோக்கிய தயாரிப்புகளில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தில் சார்பில் தயாரிக்க‌ப்படும் ஆடம்பரமான வாசனை திரவியங்கள், அழகு மற்றும் ஆரோக்கிய பொருள்களை இணையத்தில் விற்பனை செய்வதற்காக பார்கோஸ்.காம் இணையதளச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 18 நகரங்களில் 45 விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பார்கோஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு நிலையான விநியோகத்தின் மூலம் அதன் நம்பகத்தன்மையை உருவாக்கி உள்ளது. உலகளாவிய ஜாம்பவான்களான எல்விஎம்ஹெச், ஷிசிடோ க்ரூப், லோரியல், பியூக், கோடி, இன்டர்பார்பம்ஸ் ஆகியவற்றுடன் சர்வதேச அளவில் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் அமேசான், டாடா க்ளிக் மற்றும் நைகா ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. பார்கோஸ் நிறுவனத்தின் மூத்த செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் பிஜு ஆண்டனி கூறுகையில், பார்கோஸ்.காம் மூலம் நாங்கள் இந்தியா முழுவதும் உள்ள 45 பார்கோஸ் விற்பனை கிளைகளுக்க‌ப்பால் ஆடம்பர சில்லறை அனுபவத்தை விரிவாக்க விரும்பினோம். வாடிக்கையாளர்களின் இல்லங்களில் வாசல்களில் எங்களின் வாசனை திரவியங்களும், அழகுப்பொருள்களும் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோம் என்றார். நடிகை ஸ்ருதிஹாசன கூறியது: இந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த இடமாக அழகு வாசனை திரவியங்கள், அழகு சாதனங்களை விற்பனை செய்யும் பார்கோஸ் விற்பனை மையங்கள் உள்ளன. பார்கோஸ் மூலம் என் வசதிக்கேற்ப எனது அழகு ஷாப்பிங்கை தொடர எனக்கு விருப்பம் உள்ளது என்றார். மேலும் விவரங்களுக்கு http: //www.parcos.com என்ற இணையதளத் சேவை அணுகலாம்.

ReplyForward


 
 
 

Comentarios


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Bangalore Dhinamani Daily. Proudly created with Wix.com

bottom of page