பெங்களூரு, நவ. 2: நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 56 -வது ரேங்கை ஆகாஷ் கல்வி மையத்தின் மாணவர் சோனித்சாய் ஷெட்டி பிடித்துள்ளார்.
பெங்களூரு ஜெயநகரில் செவ்வாய்க்கிழமை ஆகாஷ் கல்வி மையத்தின் கர்நாடகத்தின் துணைத் தலைவர் ரவிகாந்த், நீட் தேர்வில் சிறந்து விளங்கிய சோனித்சாய் ஷெட்டி வாசிபள்ளி உள்ளிட்ட மாணவர்களை கௌரவித்த பின்னர் பேசியது: அண்மையில் நடந்த நீட் தேர்வில் ஆகாஷ் கல்வி மையத்தில் பயின்ற மாணவர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். குறிப்பாக கர்நாடகத்தில் உள்ள ஆகாஷ் கல்வி மையக் கிளைகளை சேர்ந்த மாணவர்கள் மைசூரைச் சேந்த மேகன், மங்களூரை சேர்ந்த ஜெய்வந்த் ஜெய்பாரா, பெங்களூரைச் சேர்ந்த சோனித்சாய் ஷெட்டி உள்ளிட்ட சிறந்து விளங்கி உள்ளனர். இதில் பெங்களூரில் சோனித்சாய்ஷெட்டி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரை பாராட்டி கௌரவிப்பதன் மூலம் அவரின் உயர்ப்படிப்பு ஊக்கம் கிடைக்கும் என்ற நோக்கில், அவரையும் நீட் தேர்வில் சிறந்து விளங்கிய மற்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவித்துள்ளோம் என்றார்.
மாணவர் சோனித்ராய் ஷெட்டி வாசிப்பள்ளி பேசியது: கரோனா காலத்தில் வகுப்பறைக்கு சென்று படிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், இணைய வழி மூலம் ஆகாஷ் கல்வி மையத்தில் பயின்றோம். தொலைபேசியில் பலமுறை இணையவழியில் கல்வி பயின்றப்போது பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேறிட்டது. இருப்பினும் நீட் தேர்வில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆர்வமாகவும், கவனமாகவும் கல்வி பயின்றேன். இருப்பினும் இந்திய அளவில் 56-வது ரேங்கை பிடிக்க நேரிட்டது. ஆனால் பெங்களூரில் முதல் இடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மருத்துவப்படிப்பை தொடர உள்ள என்னை ஆகாஷ் கல்வி மையம் பாராட்டி, கௌரவித்துள்ளது பெருமை அளிக்கிறது என்றார்.
Commentaires