பெங்களூரு, மே 14: நாட்டை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை அமைக்கும் முயற்சியில் எச்சிஎல் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.
எச்சிஎல் டெக்னாலஜிஸின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு பிரிவான எச்சிஎல் அறக்கட்டளை நாட்டை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை அமைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எச்சிஎல் அறக்கட்டளை கடந்த 11 ஆண்டுகளில் ரூ. 900 கோடிகளை கார்ப்பரேட் சமூகப் பொறுப்பில் செலவு செய்துள்ளது. கர்நாடகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்காக பெங்களூரில் நடைபெற்ற எச்சிஎல் 8-ஆம் பதிப்பின் கருத்தரங்கில் ரூ. 16.5 கோடி மதிப்பிலான நிதி உதவியை அறிமுகப்படுத்தியது. எச்சிஎல் அறக்கட்டளை அடிமட்ட அளவில் அதிகாரமளிக்கும் சக்தியை உறுதியாக நம்புகிறது. கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு என்பது, அடித்தளத்தில் இருந்து, நீடித்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சியும், யோசனைகளில் ஈடுபடவும், இணைந்து கற்றுக்கொள்ளவும் மற்றும் இணை உருவாக்கவும் உதவும் ஒரு வாய்ப்பாகும். கருத்தரங்கில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் கீழ் இணக்கங்களுடன் தாக்கத்தை உருவாக்குதல்' என்ற தலைப்பில் உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக வல்லுநர்களுடன் குழு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் 200 தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த, 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நுண்ணறிவுமிக்க குழு விவாதத்தில் புகழ்பெற்ற பேச்சாளர்களுடன், எச்சிஎல் அறக்கட்டளையின் இயக்குநர் நிதி பந்திர், சத்வாவின் இணை நிறுவனர் மற்றும் மூத்த செயல் அதிகாரி ஸ்ரீகிருஷ்ணா ஸ்ரீதர் மூர்த்தி (கிருஷ்ணா), தன்னார்வ ஆலோசகர் ரிஷப் லலானி, கிராண்ட் தோர்ன்டன் பங்குதாரர் சமூக மற்றும் நிலைத்தன்மை ஆலோசகர் ரோஹித் பகதூர், ரீசாவின் தலைமை நிர்வாக அதிகாரி நிகில் பந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குளோபல் ஹெட் டெலிவரி, ஃபைனான்சியல் சர்வீசஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸின் பணியாளர் மதிப்பு முன்மொழிவு அதிகாரி விஜய் மல்லையா, வணிகத்திற்காக மட்டுமின்றி சமூக தாக்கத்திற்காகவும் அர்த்தமுள்ள கூட்டாண்மைகளை உருவாக்குவதன் பங்கு குறித்து உரைநிகழ்த்தினார்.
எச்சிஎல் அறக்கட்டளையின் இயக்குநர் நிதி பண்டிர், எச்சிஎல் அறக்கட்டளை மற்றும் இந்தியாவில் அதன் சமூக மேம்பாட்டுப் பயணத்தின் மேலோட்டத்தை வழங்குவதன் முக்கியத்துவத்தை விளக்கினார். கிராமங்களில் வளர்ச்சியில் முன்மாதிரியான பணிகளைச் செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆதரிப்பதற்கான எச்சிஎல் கிராண்ட் என்ற முக்கிய திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். கருத்தரங்கில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு தொடர்பான சட்டம் மற்றும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு பாக்ஸ், தன்னார்வ தொண்டு நிறுவனபாக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் போமிக் ஷா மற்றும் ரீச்சாவின் தலைமை நிர்வாக அதிகாரி நிகில் பந்த் ஆகியோரால் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு சட்டம் மற்றும் புதிய திருத்தம் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கான நிரல் மேலாண்மை குறித்து பெங்களூரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் மேனேஜ்மென்ட் ரிசர்ச் இயக்குநர் மற்றும் பேராசிரியர் உஷா மஞ்சுநாத்தின் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்தியன் ஸ்கூல் ஆஃப் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனர் ரவி ஸ்ரீதரனால், கரோனாவிற்கு பின்னர் சமூகப் பணிகளை மறுவடிவமைப்பது குறித்த ஊக்கமூட்டும் உரை நிகழ்த்தப்பட்டது.
பெங்களூரில் எச்சிஎல் அறக்கட்டளை இரண்டாவது முறையாக இந்த கருத்தரங்களை நடத்துகிறது. 2019-ஆம் ஆண்டின் முதல் கருத்தரங்கு மாநிலத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. நிகழாண்டு நடைபெற்ற இந்த ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கும் மிகவும் ஊக்கமளிக்கிறது. கர்நாடகத்தைச் சேர்ந்த உடுப்பி, தென்கன்னடம், பல்லாரி மற்றும் ராமநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் "சமூகத்திற்குச் சொந்தமான கிராமப்புற வள மீட்பு அமைப்புகள் மூலம் நிலையான கழிவு மேலாண்மை" என்ற திட்டத்திற்காக பெங்களூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் சாஹஸ் 2020 இன் எச்சிஎல் கிராண்ட் பட்டத்தை வென்றது. இந்த கருத்தரங்கின் மூலம், எச்சிஎல் அறக்கட்டளை கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு ஆணை, சவால்கள் மற்றும் உள்ளூர் பகுதி மேம்பாடு, முன்மொழிவு எழுதுதல் மற்றும் திட்ட மேலாண்மை ஆகியவற்றில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகி, கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் மானியம் 2022-க்கு விண்ணப்பிக்க ஊக்குவித்தது. மாநிலத்தில் பல நல்லதன்னார்வ தொண்டு நிறுவனங்ககள் செயல்படுகின்றன. கருத்தரங்கில் கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் குறித்து பயனடையலாம். ஆண்டுதோறும் வெளியிடப்படும் எச்சிஎல் கிராண்ட் தொகுப்பானது வெற்றியாளர்களை மட்டுமல்ல, ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 10 பட்டியலிடப்பட்ட 30 தொண்டு நிறுவனங்களின் வேலைகளையும் கொண்டுள்ளது. இது மக்கள் சமூகத்தில் வலுவான நிர்வாகத்தின் மதிப்பை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான ஒரு படியாகும் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையில் பாதையை உடைக்கும் பணிகளைச் செய்யும் இந்திய அரசு சாரா நிறுவனங்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் சர்வதேசத் தெரிவு நிலையை வழங்குகிறது.
Comments