top of page
Search
Writer's pictureDhina mani

நிகழாண்டு இறுதிக்குள் தொற்றுநோய்க்கு முந்தைய வர்த்தக நிலையை அடைய இலக்கு


பெங்களூரு, அக். 22: நிகழாண்டு இறுதிக்குள் தொற்றுநோய்க்கு முந்தைய வர்த்தக நிலையை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று நெக்ஸஸ் மாலின் மூத்த துணைத் தலைவர் ஜெயன்நாயக் தெரிவித்தார்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களில் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் பேசியது: பெங்களூரில் உள்ள கோரமங்களா ஃபோரம் மால் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வணிகவளாகங்களில் ஒன்றாக விளங்குகிறது. கரோனா தொற்றிற்கு பிறகு கோரமங்களாவில் உள்ள ஃபோரம் மால் உள்ளிட்ட‌ 7 வணிக வளாக‌ங்களை நெக்ஸஸ் மால் குழுமம் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. கடந்த 18 மாதங்கள் நாடு முழுவதும் அனைவருக்கும் கடினமாக இருந்தது. தொற்றுநோயின் போது நுகர்வோரின் ஷாப்பிங் முறைகள் உள்ளிட்டவை மாறிவிட்டன. நுகர்வோரின் மனநிலை மாறிக் கொண்டிருக்கும் போது, பிரபல நிறுவனங்களின் விற்பனை முறையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வணிக வளாகத்திற்குள் வரும் மக்கள் தற்போது அதிக‌ விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அவர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதும், என்ன விலையில் தேடுகிறார்கள் என்பதனையும் புரிந்து கொள்ள முடிகிறது. எங்கள் பெங்களூரு வணிக வளாகங்களில், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, சில புதுமைகளை நாங்கள் செய்து வருகிறோம். வணிக வ‌ளாகத்தில் ஃபாஸ்ட்-டேக் பார்க்கிங்கை செயல்படுத்தி உள்ளோம். இது வணிக வளாகத்தின் நுழைவாயிலில் உள்ள டேக்கை ஸ்கேன் செய்து பார்க்கிங் கட்டணத்தை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை நிறுத்துவதற்காக ஆகும் நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் எங்கள் வணிக வளாங்களின் கட்டமைப்புகளை மேம்பாடுத்தி வருகிறோம். ஃபோரம் வணிக வளாகத்தின் முகப்பில், சில பிரிவுகளிலும் கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். எங்கள் சாந்திநிகேதன் வணிக வளாகத்தில், அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளதால், இருக்கை உள்ளிட்ட வசதியை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பல ஆண்டுகளாக தங்கள் உயர்ந்த கற்றலைச் செயல்படுத்துதல், ஷாப்பிங் அனுபவத்தை அதிகரிக்கச் செய்யவும், நெக்ஸஸ் மால் குழுமம் முடிவு செய்துள்ளது. தீபாவளியையொட்டி, பெங்களூரில் முதன்முறையாக, பல்வேறு புதுமைகளை செய்ய முடிவு

செய்துள்ளோம். ஒயிட்ஃபீல்ட் பிராந்தியத்தில் உள்ள‌ ஃபோரம் நெய்பர்ஹுட்டில் தி வேர்ல்ட் ஆஃப் டைனோசர்ஸ், டி-ரெக்ஸ் மற்றும் பிராச்சியோசரஸ் போன்ற வரலாற்றுக்கு முந்தைய மிருகங்கள் பார்வையாளர்களுக்கு ஈர்ப்பாக இருக்கும். சிறப்புத் தோற்றத்தில் டி-ரெக்ஸால் உருவாக்கப்படும். இந்த சிறப்பு தீம் குழந்தை பருவ நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க அனுபவத்தை உருவாக்கும் என்று நம்புகிறோம். இந்த ஆண்டு கொண்டாட்டங்களுக்காக, கோரமங்களா வணிக வளாகத்தில் மீண்டும் ஒரு தனித்துவமான அலங்காரம் 'மகிழ்ச்சியின் ஒலி' என்று அழைக்கப்படுகிறது. கோயில்களில் உள்ள கம்பீரமான மணியால் ஈர்க்கப்பட்டு, அதன் கருப்பொருளின் மூலம், இந்த வணிக வளாகம் ஆன்மீக உணர்வையும், கடவுள், தேவதைகளின் ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம். மொத்தத்தில் நிகழாண்டு இறுதிக்குள் தொற்றுநோய்க்கு முந்தைய வர்த்தக நிலையை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார். பேட்டியின் போது, நெக்ஸஸ் மால் குழுமத்தின் இயக்குநர் மனோஜ்சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



8 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page