பெங்களூரு, நவ. 2: தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் வேண்டாம் என ரீலைப் மருத்துவ இயக்குநர் சுப்ரியா தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரு பனசங்கரி 3-வது ஸ்டேஜில் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவால் நவ. 28-ஆம் தேதி ரீலைப் மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவமனை மருத்துவச் சேவைகளில் மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் பெங்களூரு உள்ளிட்ட மாநில அளவில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு யாரும் தயக்கம் காட்ட வேண்டாம். ரீலைப் மருத்துவமனையில் டிச. 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 96060-21671 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
top of page
Search
Post: Blog2_Post
bottom of page
Comments