பெங்களூரு, டிச. 17: தீ விபத்தில் சேதமடைந்த ஆலைக்கு ரூ. 137 கோடி இழப்பீட்டை டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியது.
இது குறித்து டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவத்தின் வர்த்தக அதிகாரி விவேக் சதுர்வேதி செய்தியாளர்களிடம் கூறியது: குஜராத் மாநிலத்தில் முன்னணியில் உள்ள ரசாயன ஆலையில் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி அதிகாலையில் வெடிப்பைத் தொடர்ந்து, ஏற்பட்ட தீ விபத்தில் ஆலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டதோடு,பணியிலிருந்த சில தொழிலாளர்கள் காயமடைந்தனர். சில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தால் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதால், அந்த நிறுவனம் ரூ. 137 கோடி இழப்பீடு கோரியது. அதனை 9 மாதத்தில் பகுதி வாரியாக டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியது. இது போன்ற பெரிய விபத்துக்கள் தொழில்முனைவோரின் உத்வேகத்தையும், வணிகத்திற்கு நீண்டகால பாதிப்பையும் உண்டாக்கும். ஒரு காப்பீடு வழங்கும் நிறுவனமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக காப்பீட்டுத் தொகை அளிப்பதன் மூலம் அவர்களது இழப்பையும், பாதிப்புகளையும் குறைக்க முடியும். இதுபோன்ற சூழலில் காப்பீடு செய்தவர்களின் மீதான அக்கறை மிகவும் முக்கியம். மேலும் எங்களது குழுவின் சிறந்த ஒத்துழைப்பின் மூலம் காப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்கியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 2021-2002- ஆம் நிதி ஆண்டின் அரையாண்டில் தீ விபத்திற்கான 99 சதம் காப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளோம் என்றார்.
Comentarios