டிஜிட் இன்சூரன்ஸில் ஆர்.எஸ். ஃபிலிம்கிராஃப்ட் முதலீடு
- Dhina mani
- Dec 22, 2021
- 1 min read
பெங்களூரு, டிச. 22: டிஜிட் இன்சூரன்ஸில் ஆர்.எஸ். ஃபிலிம்கிராஃப்ட் ரூ. 5 கோடி முதலீடு செய்துள்ளது.
இது குறித்து டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிறுவனருமான காமேஷ் கோயல் கூறியது: கரோனா தொற்றுநோய் அதிகரித்து வரும் நிலையில், அனைவரின் வாழ்க்கையிலும் காப்பீடு முக்கியத்துவம். பெறுகிறது. இந்த நிலையில், ஆர்.எஸ். ஃபிலிம்கிராஃப்ட், டிஜிட் இன்சூரன்ஸில் ரூ. 5 கோடிமுதலீடு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. டிஜிட் இன்சூரன்ஸில் காப்பீடு செய்வது மிகவும் எளிமையானது. சாதாரணமானவர்களும் சட்டப்பூர்வ வாசகங்களைப் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் எங்களின் காப்பீடு திட்டம் உள்ளது. ஆர்.எஸ். ஃபிலிம்கிராஃப்ட் எங்கள் நிறுவனத்தை நம்பி இணைந்துள்ளதற்காக, ஊழியர்கள், பங்குதார்கள் பெருமை அடைய வேண்டும். 4 ஆண்டை பூர்த்தி செய்துள்ள எங்கள் நிறுவனத்தில் 2 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆசியா இன்சூரன்ஸ் ரிவ்யூ வழங்கும் ஆசிய இன்சூரன்ஸ் இண்டஸ்ட்ரி விருதுகளில் ஆண்டின் சிறந்த டிஜிட்டல் காப்பீட்டாளர் விருது,ஐஎஃப்டிஏ- 2021 இன்சூரேடெக்கில் சிறந்து விளங்குவதற்கான விருது, ஸ்கோட்ச் (SKOCH) தங்கத்தையும் வென்றுள்ளோம். இந்தியாவின் முதல் கரோனா காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கான விருது, சான்றிதழை டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பணி செய்தற்கு, சிபி இன்சைட்ஸ் ஃபின்டெக்கிலும் எங்கள் நிறுவனம் இடம்பெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி ஜிட் இன்சூரன்ஸின் தூதுவராக உள்ளார் என்றார்.
Comments