டிசிஎல் வீடியோகால் க்யூஎல்இடி 4கே சி725 டிவி அறிமுகம்
- Dhina mani
- May 13, 2022
- 1 min read

பெங்களூரு, மே 12: பை இன்டர்நேஷனல் எலக்ட்ரானிக்ஸில் டிசிஎல் வீடியோகால் க்யூஎல்இடி 4கே சி725 டிவி அறிமுகம் செய்யப்பட்டது.
பெங்களூரு இந்திராநகரில் உள்ள பை இன்டர்நேஷனல் எலக்ட்ரானிக்ஸில் டிசிஎல் வீடியோகால் க்யூஎல்இடி 4கே சி725 டிவியை டிசிஎல் இந்தியாவின் மேலாண் இயக்குநர் மைக், பை இன்டர்நேஷனல் எலக்ட்ரானிக்ஸின் மேலாண் இயக்குநர் ராஜ்குமார்பை அறிமுகம் செய்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் டிசிஎல் இந்தியாவின் சந்தைப்படுத்துதல் தலைவர் விஜயகுமார் மிக்கிலினேனி கூறியது: பெங்களூரு இந்திராநகரில் உள்ள பை இன்டர்நேஷனல் எலக்ட்ரானிக்ஸில் அனைத்து புதிய டிசிஎல் வீடியோ கால்க்யூஎல்இடி 4கே சி725 பிரிவில் 50, 55, 65 அங்குல டிவிகளை அறிமுகம் செய்து வைத்துள்ளோம். பெங்களூரில் இந்த டிவிகளை வாங்கும் முதல் 25 பேருக்கு ரூ. 17 ஆயிரம் மதிப்புள்ள எல்ஜி எக்ஸ்பூம் (ஸ்பீக்கர்), ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள டிசிஎல் வீடியோ அழைப்பு கேமரா மற்றும் முன்னணி வங்கிகளின் கார்டுகளில் கூடுதலாக 10 சதம் கேஷ்பேக் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். டிசிஎல் எப்போதும் புதுமை, வசதி மற்றும் மலிவு விலையை நோக்கமாகக் கொண்டுள்ளது. எங்களின் இந்த புதிய டிவிகள் பட்ஜெட்டுக்கான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுடன் சரியாகப் பொருந்துகிறது. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அனைத்தும் வாடிக்கையாளர் சார்ந்த அணுகுமுறைகள் மூலம் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியாவின் முதல் வீடியோ அழைப்பு க்யூஎல்இடி 4கே சி725 டிவி அடுத்த தலைமுறைக்கான மாடல் ஆகும். பிரீமியம் டிவி பார்க்கும் அனுபவத்தின் கனவை நிஜமாக்குகிறது. இந்த டிவி புதுமை மற்றும் மோஷன் எஸ்டிமேஷன் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் வருகிறது. இது டால்பை அட்மோஸ், ஆன்க்யோ சான்றளிக்கப்பட்ட ஒலி அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது முழு ஆடியோ அனுபவத்தையும் எல்லையற்ற புத்திசாலித்தனமாகவும் துல்லியமாகவும் ஆக்குகிறது. டிசிஎல் வீடியோ கால் க்யூஎல்இடி 4கே சி725 டிவி ஏஐபிக்யூ இன்ஜினுடன் உட்பொதிக்கப்பட்டுள்ளது. இது நிகழ்நேரத்தில் உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் துல்லியமான, விரிவான ஆடியோ,வீடியோ வெளியீட்டை வழங்குகிறது. இதன் முதன்மையான வீடியோ கால் கேமரா அம்சம், பயனர்கள் கூகுள் டுயோ மூலம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை அழைப்புகளை ஒரு சில தொடுதல்களில் செய்ய அனுமதிக்கிறது. ஒருவர் குரல் அல்லது வீடியோ குறிப்புகளை அனுப்பலாம். அல்லது தேவையற்ற தொந்தரவு இல்லாமல் குழு அழைப்புகளை செய்யலாம். சாதனம் ஒரு தனித்துவமான டிசிஎல் ஹோம் என்டர்டெயின்மென்ட் மையங்களை கொண்டுள்ளது. 7 ஆயிரத்திற்கும் அதிமான ஆண்ட்ராய்டு பயன்பாடுகளையும், 70 ஆயிரத்திற்கும் அதிமான டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைக் கொண்டுள்ளது. இது சமூக ஊடகங்களுடன் பயனர்களை இணைக்கிறது என்றார்.
Comments