பெங்களூரு, அக். 12: ஆகாஷ் கல்வி மையத்தின் "ஆன்தே-2021" தேர்வு டிச. 4-ஆம் தேதி தொடங்கி, 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அம்மையத்தின் மண்டல் இயக்குநர் தீரஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய அளவில் மாணவர்களின் திறனை கண்டறியும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான திறமை கண்டறியும் போட்டியை (ஆன்தே) ஆகாஷ் கல்வி மையம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் கரோனா தொற்றின் பாதிப்பை அடுத்து, மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத முடியாத சூழலில் இணைவழி மூலம் 4-ஆம் தேதி தொடங்கி, 12-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
இணைய வழி வசதி இல்லாதவர்கள் தேசிய அளவில் உள்ள எங்களில் 215 மையங்களில் நேரில் கலந்து கொண்டு தேர்வு எழுதும் வசதி டிச. 5-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஏற்படுத்தி தர முடிவு செய்துள்ளோம். இந்த தேர்வு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும். நேரில் கலந்து கொண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் அரசின் வழிகாட்டுதலை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த தேர்வில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் https://anthe.aakash.ac.in/anthe இணையதளத்தில் தங்களது பெயரை ரூ. 99 செலுத்தி, தேர்விற்கு 7 நாள்கள் முன்பு வரை பதிவு செய்து கொள்ள முடியும். இந்த தேர்வில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஆகாஷ் கல்வி மையத்தில் கல்வி கற்பதற்கு 100 சதம் கட்டணம் இலவசமாக வழங்கப்படும். சிறந்து விளங்கும் 5 மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசாவிற்கு எங்களின் செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். 5 மாணவர்களின் ஒருவரது பெற்றோரையும் எங்களது செலவில் நாசாவிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம் என்றார். நிகழ்ச்சியில் மையத்தின் இணை இயக்குநர் வெங்கட் ரவிகாந்த், மக்கள் தொடர்பாளர் வருண்சோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments