பெங்களூரு, பிப். 12: சர்வதேச விருந்தோம்பல் கவுன்சில் (IHC) ஏற்பாடு செய்த 2022-ஆம் ஆண்டின் 8-வது சர்வதேச இளம் சமையலர் (YCO) இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் போட்டியை (IIHM) நடத்தியது. இதில் இத்தாலியைச் சேர்ந்த மேட்டியோ சிக்னெட்டி முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார்.
உலகின் மிகப்பெரிய சமையல் போட்டிகளில் ஒன்றான சர்வதேச இளம் சமையலர் இறுதிப்போட்டி நிகழாண்டு கொல்கத்தாவில் நடைபெற்றது. ஆறு கண்டங்களாக, 24 மண்டலங்களில் ஏழு நாள்கள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த மேட்டியோ சிக்னெட்டி முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார்.அவருக்கு தங்கக் கோப்பை, சான்றிதழ், 5 ஆயிரம் அமெரிக்க டாலருக்கான காசோலை வழங்கப்பட்டது. வெள்ளிப் பதக்கத்தை சிங்கப்பூரின் சோங் ஜியா தேவும், வெண்கலப்பதக்கத்தை ஐஸ்லாந்தின் ஹால்டோர் ஹஃப்லிடாசன் வென்றனர். ஜூரியின் தலைவர் பேராசிரியர் டேவிட் ஃபோஸ்கெட், சர்வதேச இளம் சமையலர் போட்டியின் முதன்மை நீதிபதியுமான சஞ்சீவ் கபூர் ஆகியோரால் காணொலி மூலம் வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு சர்வதேச விருந்தோம்பல் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரியும், யங் செஃப் ஒலிம்பியாடின் நிறுவனருமான டாக்டர் சுபோர்னோ போஸ் கிராண்ட் பேசுகையில், 2022-ஆம் ஆண்டில் இளம் சமையலர் ஒலிம்பியாட் போட்டி, தொற்றுநோயையும், அதனால் ஏற்பட்டுள்ள தடைகளையும் முறியடிப்பதில் முன்மாதிரியாக உள்ளது. விருந்தோம்பல் துறையில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இது மீண்டும் நல்ல நாட்களின் தொடக்கம் என நம்புகிறேன். இது ஐக்கிய நாடுகளின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Zenobia Nadirshaw Diamond Research Award என்ற சிறப்பு விருது, உலகை வாழ சிறந்த இடமாக மாற்ற அவற்றை எவ்வாறு அடைவது என்பது குறித்து ஆராய்ச்சி செய்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பிரிவில் கென்யா, வங்கதேசம், இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு 4 விருதுகள் கிடைத்தன. இந்த போட்டியால் அதிநவீன தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மூலம் உலகின் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை இணைய வழிவகுக்கிறது. முதல் 3 இடங்களைத் தவிர, போட்டியில் 11 முதல் 20 வரையிலான தரவரிசையில் அடுத்த சிறந்த இடத்தை ஆர்மேனியாவின் கயானே சிமோனியன் பெற்றார். கிச்சன் கட் மேனேஜ்மென்ட் விருது சுவிட்ஜர்லாந்திற்கு கிடைத்தது. சிறந்த சைவ உணவு விருது இங்கிலாந்துக்கும், சிறந்த கிரீம் கேரமல் உணவு பல்கேரியாவுக்கும் சென்றது. பங்கேற்பாளர்களைப் பற்றிய ஒவ்வொரு வழிகாட்டியின் பரிந்துரைகளின் அடிப்படையில் 6 வழிகாட்டி விருதுகள் வழங்கப்பட்டன. நைஜீரியா, கனடா, இத்தாலி, நேபாளம், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு விருதுகள் கிடைத்தன. ஆறு சிறந்த இளம் செஃப் அம்பாசிடர் விருதுகள் இந்தியா, மெக்சிகோ, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, கிரீஸ் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றன. போட்டியின் போது சிறந்த சுகாதாரம், சமையலறை நடைமுறைகளை பராமரித்ததற்கான விருதுகள் கிரீஸ், ஐஸ்லாந்து, ஈரான், நேபாளத்தைச் சேர்ந்த 4 பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. சிறப்பான முறையில் கத்தியை பயன்படுத்தும் திறன் கொண்டவர்களுக்கான விருதுகள் ஈரான், இத்தாலி, கனடா மற்றும் நமீபியாவைச் சேர்ந்த 4 பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன என்றார்.
Comments