top of page
Search

செப். 15 இல் கர்நாடக திமுக சார்பில் முப்பெரும் விழா

  • Writer: Dhina mani
    Dhina mani
  • Sep 10, 2022
  • 1 min read

பெங்களூரு, செப். 10: கர்நாடக திமுக சார்பில் முப்பெரும் விழா செப். 15-ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது.


இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கர்நாடக திமுக சார்பில் முப்பெரும் விழா நாள் செப். 15-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பெங்களூரு இராமச்சந்திரபுரத்தில் அமைந்துள்ள கர்நாடக மாநில திமுக அலுவலகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கம், தந்தை பெரியார் பிறந்த நாள் , பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் திமுக உதய நாள் இணைந்து முப்பெரும் விழா நடைபெற உள்ளது.


விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் தந்தை பெரியார் திருவுருவப்படத்திற்கும், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவச் சிலைகளுக்கும் மாநில தி.மு.க நிர்வாகிகள் முன்னாள் மாநில நிர்வாகிகள் தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் தி.மு.க இலக்கிய அணி நிர்வாகிகள் தி.மு.க மகளிர் அணி நிர்வாகிகள் தொ.மு.ச பேரவை நிர்வாகிகள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் ஆகியோர் மாலைகள் அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்குவர் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.


மாநில திமுக சார்பில் விருதுகள் வழங்கும் விழா திராவிட கீர்த்தி சிகரா தளபதி மு.க.ஸ்டாலின் என்ற கன்னட நூல் வெளியீட்டு விழாவிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 

Comentários


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Bangalore Dhinamani Daily. Proudly created with Wix.com

bottom of page