பெங்களூரு, மே 12: சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் மு.கருணாநிதியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கர்நாடகமாநில திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கர்நாடக மாநில திமுக குழு கூட்டம் அவைத் தலைவர் மொ. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. குழுவில் கூட்டத்தில் சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு சென்னை கேளம்பாக்கம் புதிய பஸ் நிலையத்திற்கு தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் பெயர் சூட்டவேண்டும். உலகத் தமிழினத்தை தலை நிமிரச் செய்த டாக்டர் கலைஞர் தமிழகத்தை 6 முறை ஆட்சி செய்த மாபெரும் தலைவர் ஆவார். தேசிய அரசியலுக்கு வழிகாட்டிய வலிமையான தலைவராக இருந்து தமிழகத்தில் சமூக பொருளாதார சமத்துவம் மறுமலர்ச்சி ஏற்படுத்திய புரட்சியாளர். சினிமா அரசியல் இலக்கியம் என்று அனைத்து துறைகளிலும் பகுத்தறிவு விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை நீதி, நேர்மை வழியில் வழிநடத்திய உத்தம தலைவர். தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழர்களை நேசித்து அவர்களுக்காக தனது பங்களிப்பைச் செய்தவர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் என்பது வரலாற்று உண்மை. தமிழக அரசியலையும் இந்திய அரசியலையும் வழி நடத்தி தனது இறுதி மூச்சு உள்ளவரை தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவரின் பெயரை ஒவ்வொரு நாளும் உச்சரிக்க வேண்டியது நாம் அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும். எனவே சென்னையில் உள்ள எக்மோர் ரயில் நிலையத்திற்கு தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயர் சூட்ட வேண்டும் அதேபோல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் தமிழகத்திற்கு திராவிட முதல் நல்லாட்சி வழங்கி உலகை திரும்பி பார்க்க வைத்துள்ள தமிழக முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் கேளம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு கலைஞர் மு.கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று இந்த குழு தீர்மானம் நிறைவேற்றியது. மேற்கண்ட கர்நாடக திமுக சார்பில் நிறைவேற்றிய தீர்மான கோரிக்கையை தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதியார் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.
Comments