பெங்களூரு, அக். 25: கர்நாடக சித்ரகலா பரிஷத்தில் நடைபெறும் பெங்களூரு உற்சவத்தில் தீபாவளி விளக்கு சிறப்பு விற்பனை கண்காட்சி தொடங்கி உள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தீபாவளி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகை. இந்தியர்களின் வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, இருளை அகற்றும் விளக்குகள் அவற்றின் சொந்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளன. தீபாவளியின் மையப் புள்ளி விளக்குகள். அக். 22-ஆம் தேதி முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறும் பெங்களூரு உற்சவத்தில், விளக்குகள் முக்கிய ஈர்ப்பாக இருக்கும். பலவிதமான களிமண் விளக்குகள், உலோக விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான விளக்குகள் விற்பனையில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியில் அலங்காரம், ஆடைகள், பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியின் முக்கிய நோக்கம் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களின் கலைப்பொருள்களை சந்தைப்படுத்துதல் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ReplyForward
Comments