பெங்களூரு, அக். 12: சிஎம்ஆர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு
வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இது குறித்து அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பெங்களூரில் உள்ள சிஎம்ஆர் பல்கலைக்கழகம் கல்வியில் சிறந்து
விளங்குவதால், அதில் சேர்ந்த பயிலுவதற்கு மாணவர்களும், பெற்றோர்களும்
ஆர்வமாக உள்ளனர். அப்படி பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு செர்னர் கார்ப்பரேஷன் இந்தியா, போஷ், கேப்ஜெமினி இந்தியா, இன்போசிஸ்,
சிம்ப்லிலியர்ன், ஸுமாட்டோ இந்தியா, பஜாஜ் அலையன்ஸ், கேபிஎம்ஜி இந்தியா, விப்ரோ, எஸ்எல்கே சாப்வேர், பிளிப்கார்ட் இந்தியா, ஹெச்பி எண்டர்பிரைஸ் லிமிடெட், தாம்சன் ராய்ட்டர்ஸ் இந்தியா உள்ளிட்ட120-க்கும் அதிகமான பல பெரும் நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்து வருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா தொற்றின் பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால், பலர் வேலை வாய்ப்பை இழந்தபோதும், சிஎம்ஆர் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது. இதற்கு மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட நடவடிக்கையே காரணம். சிஎம்ஆர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பிற்கு தேவையான கல்வியை மாணவர்களுக்கு
அளித்து வருகிறோம். சுப்பையா, ஹரி உள்ளிட்ட மாணவர்கள் தாங்கள் சிஎம்ஆர் பல்கலைக்கழகத்தில் பயின்றதால், அதிக ஊதியத்தில் பெரும் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அதற்காக பல்கலைக்கழகத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments