பெங்களூரு, செப். 15: கர்நாடக திமுக சார்பில் பெங்களூரில் முப்பெரும் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
கர்நாடக திமுக சார்பில் முப்பெரும் விழா நாள் செப். 15-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் பெங்களூரு இராமச்சந்திரபுரத்தில் அமைந்துள்ள கர்நாடக மாநில திமுக அலுவலகம், தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில், தந்தை பெரியார் பிறந்த நாள் , பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் திமுக உதய நாள் ஆகியவை இணைந்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது
விழாவில் தளபதி மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் தந்தை பெரியார் திருவுருவப்படத்திற்கும், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவச் சிலைகளுக்கும் மாநில திமுக மைப்பாளர் ந.ராமசாமி தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் முன்னாள் மாநில நிர்வாகிகள் தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் தி.மு.க இலக்கிய அணி நிர்வாகிகள் தி.மு.க மகளிர் அணி நிர்வாகிகள் தொ.மு.ச பேரவை நிர்வாகிகள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் ஆகியோர் மாலைகள் அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அமைப்பாளர் ராமசாமி கூறியது: கர்நாடக மாநில திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, திமுக தொடங்கிய தினம் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டு கர்நாடகத்தில் கட்சிக்காக உழைத்த கழக முன்னோடிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், முரசொலி மாறன், தளபதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது பெயரில் விருதுகள் வழங்கி கௌரவித்த்து வருகிறோம். இவ்வாண்டும் கட்சிக்காக உழைத்த 7 பேருக்கு இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும். விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை வரவழைத்து முப்பெரும் விழாவில் விருது வழங்கும் விழா சிறப்பாக நடத்தப்படும். இன்று நடைபெற்றது முப்பெரும் விழாவின் தொடக்கமாகும். இதனை மற்றொரு நாள் சிறப்பாக நடத்தப்படும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாநில திமுகவின் அவைத் தலைவர் மொ.பெரியசாமி, பொருளாளர் கே. தட்சிணாமூர்த்தி, துணை அமைப்பாளர் ஜி.ராமலிங்கம், இளைஞரணி துணை அமைப்பாளர் மு.ராஜசேகர், மகளிர் அணித் தலைவர் அம்மாயி ஜெயவேல், பொதுக்குழு உறுப்பினர் முருகமணி செல்வம், தொமுச பேரவைச் செயலாளர்கள் த.திருமலை, து.பிரபு, இலக்கிய அணித் தலைவர் முருகு தர்மலிங்கம், எம்.ஆர்.பழநீ, மகேஷ்பாபு, மணிமேகலை, டாக்டர் ஸ்ரீகாந்த், பாவலர் ப.மூர்த்தி, இளங்கோ, பூபாலன்,கிருஷ்ணன், உத்ரகுமார், எஸ்.ராஜ்குமார் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
Commentaires