பெங்களூரு, அக். 3: கப்பல் பயணத்தின் போது பணபரிவர்த்தைக்கு எஸ்பிஐ வங்கி ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து அவ்வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கப்பல்களின்
பணிபுரிவோரும், பயணம் செய்பவர்களும் பண பரிவர்த்தை செய்வதற்கு பல்வேறு சிக்கல்களை அனுபவிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி, கப்பல் பயணத்தின் போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் எஸ்பிஐ நாவ் பண அட்டை திட்டத்தின் மூலம் பணவர்த்தனைக்கு ஏற்பாடு செய்து உள்ளது. எஸ்பிஐ நாவ் பண அட்டை திட்டத்தில் ஆஃப்லைன், ஆன்லைன் முறையில் பணவர்த்தனை செய்யப்படும். இதனால் கடலில் உள்ள அனைத்து கப்பல்கள், ஆயுதப்
படைகள், துணைப்படை, கோய் அமைப்புக்களின் தொலைதூர நிலையங்கள் பயனடையும். வங்கிகளின் டிஜிட்டல் பணவர்த்தனையில் இது ஒரு மைல்கல்லாகும். கார்வாரில் அக். 1-ஆம் தேதி விக்ரமாதித்யா கப்பலில் எஸ்பிஐ நாவ் திட்டத்தை மேற்கு மண்டல கப்பல்படை கம்மண்டர் ஹரிகுமார், எஸ்பிஐ வங்கியின் ரிடையல் மற்றும் டிஜிட்டல் பிரிவின் மேலாண் இயக்குநர் சி.எஸ்.ஷெட்டி ஆகியோர் தொடக்கி வைத்தனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
Comentários