top of page
Search
Writer's pictureDhina mani

கண்தானம் குறித்து விழிப்பபுணர்ச்சி ஏற்படுத்துவது அவசியம்: அமைச்சர் கே.சுதாகர்

பெங்களூரு, டிச. 11: கண்தானம் குறித்து விழிப்பபுணர்ச்சி ஏற்படுத்துவது அவசியம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்தார்.

பெங்களூரு இந்திராநகரில் சனிக்கிழமை அகர்வால் கண் மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதியக்கிளையை தொடக்கி வைத்து அவர் பேசியது: கர்நாடகத்தில் யார் புதிய மருத்துவமனையை தொடங்கினாலும், அதனை மாநில அரசு வரவேற்கிறது. அகர்வால் கண் மருத்துவமனையினர் பெங்களூரில் தங்களின் 11-வது கிளையை தொடங்கி உள்ளதை மாநில அரசு வரவேற்கிறது. அதே நேரத்தில் மருத்துவக்குழுமத்தினர் மக்களிடத்தில் கண்தானம் குறித்து விழிப்பபுணர்ச்சி ஏற்படுத்துவது அவசியம். சர்வதேச அளவில் 4 கோடி பேர் பார்வை இல்லாமல் உள்ளனர். இந்தியாவில் பல லட்சம் பேர் பார்வையில்லாமல் உள்ளனர். கண் தானம் செய்வதன் மூலம் அவர்களுக்கு பார்வை கிடைக்கும். இந்தியாவில் கண்தானம் செய்பவர்களின் எண்ணிக்கை 5 சதமாக உள்ளது. இதனால் பலருக்கு பார்வை கிடைப்பதில் தாமதம் ஏற்பகிறது. இறந்த பிறகு கண்களை தானம்செய்ய அனைவரும் முன் வரவேண்டும். கன்னத்தில் பிரபல நடிகர்கள் ராஜ்குமார், அவரது மகன் புனித்ராஜ்குமாரின் மரணத்திற்கு பிறகு அவர்களின் கண்கள் தானம் செய்யப்பட்டது. இதனால் பலருக்கு பார்வை கிடைத்தது. அவர்களை பின்பற்றி மற்றவர்களும் கண்களை தானம் செய்ய முன் வரவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கண் மருத்துவமனையின் குழுமத்தின் மூத்த செயல் அதிகாரி அதில் அகல்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

6 views0 comments

Kommentare


Post: Blog2_Post
bottom of page