top of page
Search

குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை குறைபாடு பெரும் சவாலாக உள்ளது

  • Writer: Dhina mani
    Dhina mani
  • Oct 7, 2021
  • 1 min read

பெங்களூரு, அக். 7: குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை குறைபாடு பெரும்

சவாலாக உள்ளது என்று அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர் பிந்தியா அப்பானி தெரிவித்தார்.

பெங்களூரில் வியாழக்கிழமை அம்மருத்துவமனை சார்பில் நடைபெற்ற

செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: பல ஆண்டுகளாக‌ குழந்தை பருவ குருட்டுத்தன்மைக்கான காரணங்களில் ஏற்பட்ட மாற்றம் அரசாங்கத்தின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நோய்த்தடுப்புத் திட்டங்களின் வெற்றி, நாட்டில் அதிகரித்து வரும் சமூகப் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது. இருப்பினும், குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை குறைபாடு பெரும் சவாலாக உள்ளது. குழந்தை குருட்டுத்தன்மையைக் கட்டுப்படுத்த ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு அவசியம். நல்ல ஊட்டச்சத்து, தாய், குழந்தை பராமரிப்பு வசதிகள், நோய்த்தடுப்பு, சரியான நோயறிதல்,கண்ணின் பொதுவான நிலைகளுக்கு சிகிச்சை ஆகியவை முக்கியம். கிராமப்புறங்களில், நன்கு பயிற்சி பெற்ற கண் நிபுணர்களுடன் மூன்றாம் நிலை பராமரிப்பு வசதிகள் கிடைப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது. நாட்டில் குழந்தை

கண் பராமரிப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. வடக்கு, கிழக்கு இந்தியாவுடன் ஒப்பிடும்போது தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் சிறந்த கண் பராமரிப்பு வசதிகள் உள்ளன. குழந்தைகளின் கண் மருத்துவம் இப்போது நாட்டில் ஒரு தனித்துவமான சிறப்புத் திறனாக வளர்ந்து வருகின்ற போதிலும்,

dபெங்களூரு, அக். 7: குழந்தைகளுக்கு ஏற்படும் பார்வை குறைபாடு பெரும். பிறவி கண்புரை மற்றும் குறைப்பிரசவத்தின் ரெட்டினோபதி போன்ற சிக்கலான நிலைகளுக்கு குழந்தை கண் மருத்துவர்களின் தேவை உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குருட்டுத்தன்மையை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது அவசியம். குழந்தைகளின் கண் நோய்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், வயது முதிர்ந்த பிறகு சிகிச்சை அளிக்க முடியாது சூழல் ஏற்படும். குழந்தைக்கு கண்ணில் குந்துதல் அல்லது வெள்ளை ரிஃப்ளெக்ஸ் (லுகோகோரியா) காணப்பட்டால், உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளில் பார்வைக் குறைபாட்டிற்கு முக்கிய காரணம் ஒளிவிலகல் பிழை ஆகும். எனவே, குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்தால் குருட்டுத்தன்மையை கட்டுப்படுத்த முடியும் எdன்றார்.

 
 
 

Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Bangalore Dhinamani Daily. Proudly created with Wix.com

bottom of page