top of page
Search
Writer's pictureDhina mani

குறைமாத குழந்தைகளை பார்வை குறைப்பாட்டிலிருந்து பாதுகாக்க திட்டம்


பெங்களூரு, நவ. 18: குறைமாத குழந்தைகளுக்கு பார்வை குறைப்பாட்டிலிருந்து பாதுகாக்கும் திட்டத்தை நாராயணா கண் மருத்துவமனை செயல்படுத்தி உள்ளது.

பெங்களூரு நாராயணா கண் மருத்துவமனையில் புதன்கிழமை குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அம்மருத்துவமனைத் தலைவர் புஜங்கஷெட்டி பேசியது: நாராயணா கண் மருத்துவமனையால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் டெலிமெடிசின் அடிப்படையிலான குறைமாத குழந்தைகளை பார்வை குறைபாட்டிலிருந்து காப்பாற்றும் திட்டமான கிட்ரோபை (KIDROP) செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான குறைமாத குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். இந்தியாவில் 3.5 மில்லியன் குழந்தைகள் குறைமாதத்தில் பிறக்கின்றன. 2 கிலோவுக்கும் குறைவான குழந்தைகளுக்கு விழித்திரை பாதிப்பு ஏற்படுகிறது. குறைமாத குழந்தைகள் பிறந்த 4 வாரங்களில் கண்களை ஸ்கிரீனிங் செய்ய வேண்டும். கண்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு லேசர் அடிப்படையிலான சிகிச்சை நிலையானது. இந்த சிகிச்சைக்கு ஊசிகள் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன என்றார்.


6 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page