top of page
Search
Writer's pictureDhina mani

கார்டிகல் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மென்பொருள் சிகிச்சை அறிமுகம்

Updated: May 11, 2022


பெங்களூரு, மே 4: ஹேசர் இந்தியா குழுமம், நாராயணா கண்மருத்துவமனை இணைந்து கார்டிகல் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கையடக்க கணினி அடிப்படையிலான மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது.

பெங்களூரு நாராயணா கண்மருத்துவமனையில் புதன்கிழமை ஹேசர் இந்தியாவுடன் இணைந்து கண்பார்வை குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கையடக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. "விசியோநோவா", கார்டியல் பார்வைக் குறைபாட்டால் (CVI) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாராயணா கண்மருத்துவமனை அதன் 'பட்ஸ் டு ப்ளாசம்ஸ்' முன்முயற்சியின் ஒரு பகுதியாக, குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்தும், அறிவாற்றல் மற்றும் காட்சி திறன்களை மேம்படுத்துவதற்கும் பிரத்யேக சிகிச்சை திட்டங்களை வழங்குகிறது. கார்டிகல் பார்வைக் குறைபாடு என்பது குறிப்பிடத்தக்க கண் அல்லது முன் பார்வைப் பாதைக் குறைபாடு இல்லாமல் மூளையில் உள்ள காட்சிப் பகுதிகளின் காயத்தால் ஏற்படும் இருதரப்பு பார்வை இழப்பின் நிலையாகும். கார்டியல் பார்வைக் குறைபாடு தற்போது இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகள் மத்தியில் வளர்ந்து வரும் பெரும் பிரச்னையாக‌ உள்ளது. இந்தியாவில் 1 லட்சம் குழந்தைகளில் கார்டிகல் பார்வைக் குறைபாட்டுடன் 161 குழந்தைகள் பிறக்கின்றன. இந்தியா இதை ஒரு உயர் முன்னுரிமைப் பிரச்சினையாக அறிவித்துள்ளது. அனைத்து குழந்தைகளும் கட்டாய திரையிடல்களைப் பெற வேண்டிய 30 நிபந்தனைகளில் ஒன்றாக வகைப்படுத்தியுள்ளது. கார்டிகல் பார்வைக் குறைபாடுடைய இந்தக் குழந்தைகள் பார்வையால் வழிநடத்தப்பட்ட செயல்பாடுகளைச் செய்வதில் மிகவும் சிரமப்படுகிறார்கள், மேலும் இந்த‌ சிகிச்சைக்கான கட்டணம் அதிக அளவில் உள்ளது. மேலும் 6 முதல் 9 மாதங்கள் வரையிலான சிகிச்சைச் செயல்முறையின் முழு காலத்திற்கு குழந்தை மருத்துவமனையில் இருக்க வேண்டும். இதை நிவர்த்தி செய்யும் வகையில், ஹேசர் குழுமம் பெரும்நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் கணினி மற்றும் 100 கையடக் கணினிகளை வழங்கியுள்ளது.

மேலும் நோயாளிகளுக்காக சுமார் 2 ஆயிரம் கையடக் கணினிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கரோனா பாதிப்பால் பொதுமுடக்கம் ஏற்பட்டாலும், நோயாளிகள், அவர்களது பெற்றோர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் வசதிகளைக் கொண்டு குழந்தைகளின் கண்பார்வை குறைப்பாட்டிற்கான சிகிச்சை பெற முடியும். நாராயணா கண்மருத்துவமனை கார்டியல் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட‌ நோயாளிகளுக்குப் குறைபாடுள்ள திறன்கள் மற்றும் பார்வைத் திறன்களை மேம்படுத்த உதவும் பயிற்சிகளை வழங்குகிறது, இது வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்துகிறது. மேலும், பயன்படுத்தப்படும் பல சிறப்பு சிகிச்சைகளுக்கு விலையுயர்ந்த உபகரணங்கள் தேவைப்படுவதால், சிகிச்சையின் முழு காலத்திற்கும் குழந்தைகள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். ஆனால் நாராயணா கண்மருத்துவமனையில் கார்டியல் பார்வைக் குறைபாட்டு வல்லுநர்கள் வழிகாட்டுதலின் கீழ் தொலைநிலை சிகிச்சை வழங்கப்படுகிறது.

கையடக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில், ஹேசர் இந்தியாவின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஹரிஷ் கோஹ்லி பேசியது: நாராயணா கண் மருத்துவமனையுடன் இந்த புதுமையான ஒத்துழைப்பில் சேருவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. புதிய‌ தொழில்நுட்பம் கண் பார்வைக்கான தடைகளை மேம்படுத்த உதவுகிறது. ஹேசர் விசியோநோவா பொறிமுறையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் இரண்டையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த தீர்வாகும். ஹேசரில், மக்களுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை போக்குவதற்கும், மருத்துவ விளைவுகளை அர்த்தமுள்ள வகையில் மேம்படுத்துவதற்கும், மருத்துவச் செலவைக் குறைப்பதற்கும், விசியோநோவா நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க உதவும். "பட்ஸ் டு ப்ளாசம்ஸ் மற்றும் ஹேசர் இந்தியா முன்முயற்சி மூலம், மாற்றுத்திறனாளி குழந்தைகளை சுதந்திரமானவர்களாக மாற்றுவதற்கும், சமூகத்தின் இயல்பான நீரோட்டத்தில் அவர்களை ஒருங்கிணைப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். கார்டியல் பார்வைக் குறைபாடு உள்ள‌ நோயாளிகளை ஒருங்கிணைக்க இந்த ஒத்துழைப்பு எங்களுக்கு முக்கியமானது. அப்பாவி சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவதற்கு பக்கபலமாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றார். நிகழ்ச்சியில் நாராயணா கண் மருத்துவமனையின் தலைவர் புஜங்கஷெட்டி, மருத்துவர் ஆனந்த்வினய்கர், பூஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


191 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page