top of page
Search

காந்தி பிறந்தநாள்: இறைச்சி விற்க தடை

  • Writer: Dhina mani
    Dhina mani
  • Oct 1, 2021
  • 1 min read

பெங்களூரு, அக். 1: அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு

பெங்களூரில் சனிக்கிழமை (அக். 2)இறைச்சி விற்க பெங்களூரு மாநகராட்சி தடைவிதித்துள்ளது.

இது குறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவு: கர்நாடகத்தில்

அக். 2-ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் உற்சாகமாக

கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விலங்குகள் வதை தடைச்சட்டத்தின்கீழ் பெங்களூரு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அக். 2-ஆம் தேதி விலங்குகளை துன்புறுத்தவும், அதன் இறைச்சியை விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இறைச்சியை விற்க விதித்துள்ள தடையை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.



 
 
 

Comentarios


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Bangalore Dhinamani Daily. Proudly created with Wix.com

bottom of page