பெங்களூரு, டிச. 29: பெங்களூரில் ஏவிஆர் ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸின் தி ரீகல் ஷோ தங்க, வைர ஆபரண விற்பனைக் கண்காட்சி, டிச. 29-ஆம் தேதி முதல் ஜன. 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பெங்களூரில் புதன்கிழமை தி ரீகல் ஷோ தங்க, வைர ஆபரண விற்பனைக் கண்காட்சி ஏவிஆர் ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் ஏ.வி.ஆர்.சித்தாந்த், இயக்குநர் சௌமியா சஞ்சீவ், தி ரீகல் ஷோவின் இயக்குநர் சரண் ஆகியோர் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். பின்னர் சித்தாந்த் செய்தியாளர்களிடம் கூறியது:ஸ்வர்ண மஹால் ஜூவல்லர்ஸ் 94 ஆண்டு பாரம்பரியம் கொண்டது. தென் இந்தியாவில்16 விற்பனை கிளைகளை கொண்டுள்ளோம். 2020-இல் செய்யப்பட்ட "வென்டி" முதல் சமீபத்திய தொழில்நுட்பத்தின் தி ரீகல் ஷோ வரை யாரும் கண்டிராத மிக நேர்த்தியான தங்க, வைர நகைகளை அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தி ரீகல் ஷோவில் அனைவரையும் வியக்க வைக்கும் பல்வேறு தொகுப்புகளை நாங்கள் காட்சிப்படுத்தியுள்ளோம். இதில் வடிவமைப்பு, அழகு மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றில் சிறந்த நகை சேகரிப்பை வழங்கி உள்ளோம். இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பகுதியும் காலப்போக்கில் வலுவடையும் உணர்வுபூர்வமான தொடர்பை கொண்டுள்ளது. இந்திய பாரம்பரியம் உள்ள ஆபரணங்கள், விக்டோரியன் காலத்தால் ஈர்க்கப்பட்ட சமகால பரிசான இலகுரக ரோஜா வெட்டப்பட்ட வைர ஆபரணங்கள் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். சிண்ட்ரெல்லா சேகரிப்பு, மூன் ஸ்டோன்ஸ், போல்கிஸ், அன்ரௌண்ஸ் ஆகியவை நேர்த்தியான, தனித்துவமான வடிவமைப்புகளின் தேர்வாகும். இது 21 ஆம் நூற்றாண்டின் நவீன கால பெண்களை ஈர்க்கும் என்று நம்புகிறோம். காதணிகள், நெக்லஸ்கள், மோதிரங்கள், ஒட்டியானம், வளையல்கள் போன்றவற்றைக் கொண்ட வைர சேகரிப்பு, பழங்கால நகை சேகரிப்பு, 100 சத இயற்கையான ரூபியால் செய்யப்பட்ட டிவோலி ஆகியவை கண்காட்சியின் சிறப்பு அம்சமாகும் என்றார்.
Comments