top of page
Search

எம்.எஸ்.ராமையா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தில் 6-வது பட்டமளிப்பு விழா

  • Writer: Dhina mani
    Dhina mani
  • Mar 14, 2022
  • 1 min read

பெங்களூரு, மார்ச் 14: எம்.எஸ்.ராமையா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை 6-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பெங்களூரு எம்.எஸ்.ராமையா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் (RUAS) 6-வது பட்டமளிப்பு விழா திங்கள்கிழ்மை ஞானகங்கோத்ரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. பட்டமளிப்பு விழாவில்1647 மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்புச் சான்றிதழைப் பெற்றனர். 7 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர். (453 மாணவர்கள் முதுகலைப் பட்டங்களும், 1187 இளங்கலைப் பட்டங்களும் பெற்றனர்).கல்வியில் சிறந்து விளங்கிய 28 மாணவர்கள் எம்.எஸ்.ராமையா தங்கப் பதக்கங்களும், 28 மாணவர்கள் வெங்கடம்மா ராமையா வெள்ளிப் பதக்கங்களும், 8 மாணவர்கள் சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான கௌரம்மா ராமையா வெள்ளிப் பதக்கங்களும் பெற்றனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேராசிரியர் அனில் டி சஹஸ்ரபுதே பேசியது: பட்டம் பதக்கங்களும் பெற்ற மாணவர்கள், அவர்களது பெற்றோரை வாழ்த்துகிறோம். பயன்பாட்டுக் கற்றலுக்கு முக்கியத்துவம் அளித்து, எம்.எஸ்.ராமையா பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் பணியாற்றி வருவது பாராட்டுதலுக்குரியது. மாணவர்களுக்கு மதிப்புகள், நெறிமுறைகளை கல்வியின் மூலம் புகுத்துவதால் தன்னலமற்ற குடிமக்களை உருவாக்க முடிகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020 உள்ள‌ பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொண்டு, மாறிவரும் சூழலை கருத்தில் கொண்டு மாணவர்கள் அதனை நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் எம்.ஆர். ஜெயராம், பேராசிரியர்கள் ரெய்னா, எம்.சாய்பாபா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 
 
 

コメント


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Bangalore Dhinamani Daily. Proudly created with Wix.com

bottom of page