பெங்களூரு, மே 19: கேட்டர்பில்லர் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான தயாரிப்புகள் எக்ஸ்கான் கண்காட்சியில் இடம்பெற்றன.
பெங்களூரு சர்வதேச கண்காட்சி அரங்கில் மே 17-ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களின் கட்டுமானப் பொருள்கள், உபகரணங்கள் உள்ளிட்டவைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியில் பிரபலமான கேட்டர்பில்லர் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய கேட் 303 மினி ஹெக்ஸாண்ட் கேட் 120ஜி மோட்டார் கிரேடர், காடர்பில்லர் நிறுவனத்தின் தற்போதைய எக்ஸ்கேவேட்டர்கள், மோட்டார் கிரேடர்கள், வீல் லோடர்கள், பேக்ஹோ லோடர்கள் மற்றும் ஸ்கிட் ஸ்டீயர் லோடர்கள் உள்ளிட்ட சில தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன.
கண்காட்சியில் பங்குபெற்ற கேட்டர்பில்லரின் கட்டிடக் கட்டுமானப் பொருட்கள் பிரிவின் விற்பனை இயக்குநர் அமித் பன்சால், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: எக்ஸ்கானில் அறிமுகப்படுத்தப்பட்ட கேட் 303 மினிஹெக்ஸ் எந்தவொரு சவாலான நிலையிலும், வாடிக்கையாளர்கள் தங்கள் வேலையை லாபகரமாகவும், திறமையாகவும், பாதுகாப்பாகவும் செய்து முடிப்பதில் கவனம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேட்டர்பில்லரின் வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பத்திலிருந்து இறுதி வரையில் நிலையான தீர்வுகளை ஆதரிக்கும் இயந்திரங்கள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைந்த அமைப்பைக் கொண்டுள்ளது என்றார்.
கேட்டர்பில்லரின் உலகளாவிய கட்டுமானம், உள்கட்டமைப்பு பிரிவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குநர் முகுல் தீட்சித் கூறியது: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேட் 120 ஜிசி மோட்டார் கிரேடர் மற்றும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் தீர்வுகள் ஆகியவை தொலைநோக்கு மற்றும் தொழில்நுட்பத்துடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக உற்பத்தித்திறனுக்கான உகந்த தீர்வைக் கண்டறிய உதவும். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அப்பால் விரிவடைவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார்.
Comments