top of page
Search

உறுதியான பரிசுகளுடன் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை வரவேற்கிறது ஃபோரம் நெய்பர்ஹூட் மால்

  • Writer: Dhina mani
    Dhina mani
  • Dec 22, 2021
  • 1 min read

பெங்களூரு, டிச. 22: உறுதியான பரிசுகளுடன் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை ஃபோரம் நெய்பர்ஹூட் மால் வரவேற்கிறது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வருவதால், ஃபோரம் நெய்பர்ஹூட் மால் சர்வதேச பிராண்டுகளில் சிறந்தவைகளில் சலுகை, தள்ளுபடி அறிவித்துள்ளது. ரூ. 10 ஆயிரதிற்கும் மேல் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு உறுதியான பரிசுகளுடன் செல்வது உறுதி. இதனால் வாடிக்கையாளர்களுக்கு முழுதிருப்தி கிடைக்கும். குளிர்கால பருவத்தின் உண்மையான‌ உணர்வை அனுபவிக்கும் வகையில் ஃபோரம் நெய்பர்ஹூட் மால் தயார் நிலையில் உள்ளது.

வட துருவம் போல அலங்கரிக்கப்பட்டுள்ள மாலில் பனி, 18 அடிக்கு மேல் உயரமுள்ள ஒரு துருவ கரடி, பெங்குவின்கள் இடம் பெற்றுள்ளன. இது குழந்தைகளை கவரும். வாடிக்கையாளர்களுக்கு குளிர்கால உணர்வை அளிக்கும். விளையாட்டுகளில் ரிங் டாஸ், பலூன் ஷூட்டிங் இடம்பெற்றுள்ளன. டிச. 15 தேதி முதல் நெய்பர்ஹூட் மாலில் 70க்கும் மேற்பட்ட பிராண்டுகள் விற்பனைக்கு கிடைக்கும்.


ஃபோரம் சாந்திநிகேதன் மால் கிறிஸ்துமஸுக்காக ஆடம்பரமாகவும், மினுமினுப்புடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.மாலில் ஏராளமான கண்கவர் காட்சிகள், கேளிக்கை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி பிரபல ஜோடிகளான அபூர்வ், கௌரவ் குப்தா ஆகியோரின் ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. வார இறுதியில் 'சாண்டா பரேட்' மற்றும் 'டெசர்ட் கார்னிவல்'இடம்பெற உள்ளது.


 
 
 

Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Bangalore Dhinamani Daily. Proudly created with Wix.com

bottom of page