பெங்களூரு, பிப். 7: இசைக் கலைஞர் பிரோதா வியின் ஆல் டிவைன் பாடல் இளைஞர்கள் அதிக அளவில் விரும்பும் கீதமாகியுள்ளது.
பாடல்களை இணையத்தில் வெளியிட்டு பிரபலமாக்குவதில் சிறந்து விளங்கும் பிரோதா வியின் புதிய பாடல் ஆல் டிவைனை யூடூபில் கடந்த பிப். 3-ஆம் தேதி வெளியிட்டார். அதனை வெளியிட்ட 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்கள் அதனை பார்த்து ரசித்துள்ளனர். இதன்மூலம் இந்த பாடல் இளைஞர்கள் அதிக அளவில் விரும்பும் கீதமாக மாறியுள்ளது. இந்த பாடல் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து புரோதா வி செய்தியாளர்களிடம் கூறியது: இந்த ஆல்பத்தை எளிதாக கேட்பது மட்டுமல்லாமல், ஒரு காட்சி விருந்தாகவும் இருக்கும் வகையில் வெளியிடுவதை நோக்கமாக கொண்டிருந்தோம். உண்மையான கருத்துடனான பாடலை உருவாக்குவதற்கான குழு உருவாக்கப்பட்டது. மனநல ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பாடலை உருவாக்குவதென குழு முடிவு செய்தது. அதன்படி பாடலை எழுதி, இசையமைத்தபோது மனநலத்தை குணமாக்கும் கருத்துக்கள் அதில் உள்ளதை உணர்ந்தேன். நாம் அனைவரும் மனநலம் உள்ளிட்ட அனைத்து நோய்களும் குணமாகிவிடும் என்ற ஒரு விஷயத்தை மேலோட்டமாக கடந்து செல்கிறோம்.
ஆனால் ஏதோ ஒன்றின் மூலம் மனநலம் உள்ளிட்ட நோய்களை குணமாக்க முடியும் என்ற உறுதி அளிக்க வேண்டும். அந்த உறுதியை இசை மூலம் நாங்கள் அளித்துள்ளோம். ஆல் டிவைன் அதைச் சரியாகச் செய்வதாகத் எனக்கு தோன்றுகிறது. பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பாடலுக்கு ஸ்டீவ் நைட் குரல் கொடுத்துள்ளார். இந்த பாடல் பார்வையாளர்கள், ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் தொடர்ந்து அனைவரும் விரும்பும் பாடல்களை வழங்க முடிவு செய்துள்ளேன் என்றார்.
Σχόλια