பெங்களூரு, மார்ச் 9: இந்தியாவிலிருந்து தென் ஆப்ரிக்காவிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை நிகழாண்டு 64 சதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென் ஆப்ரிக்காசுற்றுலா வாரியத்தின் மையத்தலைவர் நெலிஸ்வா கானி தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை தென் ஆப்ரிக்கா சுற்றுலாவாரியத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது: கரோனா தொற்றை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச அளவில் சுற்றுலாதுறை முற்றிலுமாக முடங்கியது. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், தென் ஆப்ரிக்காவின் சுற்றுலாவை மேம்படுத்த முடிவுசெய்துள்ளோம். தென்னாப்பிரிக்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் 9 சதம் பேர் பெங்களூருவிலிருந்து பயணிக்கின்றனர். இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஓய்வுக்காக 47 சதம் பேரும். வணிகம், கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகளுக்கு 43 சதம் பேர் பயணம் செய்கின்றனர். தனிப்பயணம், ஓய்வுநேரத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு அடிக்கடி பயணிப்பவர்கள் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பயணம் செய்ய உகந்த மாதங்களாகும். சுற்றுலா வாரியம், இணைப்பு மற்றும் பயணத்தை எளிதாக்குதல் ஆகியவைகளில் நிகழாண்டு ஆண்டு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம்.
இந்தியப் பயணிகளுக்குத் முன்னுரிமை அடிப்படையில் சுற்றுலா விசாக்களுக்கு அனுமதி வழங்கப்படும். தற்போது, எமிரேட்ஸ், எதிஹாத், கத்தார் ஏர்வேஸ், ஏர் அரேபியா, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், கென்யா ஏர்வேஸ் மற்றும் ஏர் மொரிஷியஸ் உள்ளிட்ட பல நிறுத்த விமானங்கள் இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு பறக்கின்றன. இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்குப் பயணிப்பவர்கள் புறப்படும் நேரத்திலிருந்து 72 மணிநேரத்திற்குப் முன்பே பிசிஆர் (கரோனா பரிசோதனை) செய்து கொள்வது அவசியம். வரவிருக்கும் மாதங்களில் இந்தியாவில் இ-விசாக்களை வெளியிட உள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மதிப்பு சார்ந்த பயணத்திட்டங்களின் அவசியத்தையும் நாங்கள் உணர்ந்துள்ளோம், மேலும் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அதிகபட்ச வருவாயை உறுதிசெய்ய ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்திய சந்தைக்கான மானிய விலையில் விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் மூலம், பயணச் செலவைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப் பார்க்கிறோம்.
வனவிலங்குகள், சாகசங்கள் மற்றும் கலாச்சார சலுகைகள் ஆகியவற்றின் நிலையை ஒருங்கிணைக்கும் அதே வேளையில், திரைப்பட சுற்றுலா சந்தையையும் இலக்காகக் கொண்டுள்ளோம்.
தென்னாப்பிரிக்காவில் திரைப்படப்பிடிப்புகள் ஏற்றம் கண்டுள்ளது. இதற்கான இலக்கை அடைவதற்காக தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இந்திய நுகர்வோர் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தென்னாப்பிரிக்காவின் காட்சிகள், ஒலிகள் மற்றும் சுவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் எங்கள் நாட்டிற்கு சுற்றுலா செய்வதற்கான ஆர்வத்தை தூண்டி வருகிறோம். சுற்றுலா வாரியம் மும்பை மற்றும் டெல்லியில் பல அனுபவ நிகழ்வுகளை ரோட்ஷோக்களை தொடர்ந்து உடனடியாக நடத்துகிறது. தென்னாப்பிரிக்க நடனக் குழுக்களின் நிகழ்ச்சிகள், பூர்வீக இசை, தென்னாப்பிரிக்க சமையல்காரர்களால் சமைக்கப்படும் சுவையான உணவுகள் மற்றும் பல்வேறு கலாச்சார ரீதியாக செயல்பாடுகளால், தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய பார்வையாளர்களை ஈர்க்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளோம். இந்தியாவில் சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதன் மூலம், தென்னாப்பிரிக்காவிற்கு கோடைகாலத்தில் சுற்றுலா செல்லபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இதன் மூலம்இரு நாடுகளிலும் உள்ள சுற்றுலா பயணம் மேற்கொள்வது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
Commenti