top of page
Search
Writer's pictureDhina mani

இந்தியா முழுவதும் 20 நகரங்களில் இந்திய தேசிய கூடைப்பந்து போட்டிகள்


பெங்களூரு, மார்ச் 17: இந்தியா முழுவதும் 20 நகரங்களில் இந்திய தேசிய கூடைப்பந்து போட்டிகள் மார்ச் 18-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளன.

இது குறித்து வியாழக்கிழமை இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவர் கே. கோவிந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியா முழுவதும் ஐஸ்வால், பெங்களூரு, பாவ்நகர், பிலாய், சண்டிகர், சென்னை, கட்டாக், டெல்லி, கௌஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், காங்க்ரா, கொச்சி, கொல்கத்தா, லூதியானா, லக்ணௌ, மும்பை, பஜ்ஜிம், புதுச்சேரி உள்ளிட்ட 20 நகரங்களில் இந்திய தேசிய கூடைப்பந்து போட்டிகள் மார்ச் 18-ஆம் தேதி முதல் தொடங்கி மே 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 3x3 போட்டிகள் ஆண்கள், பெண்கள், 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் என நான்கு பிரிவுகளில் நடைபெறும். ஒவ்வொரு நகரத்திலிருந்து வெற்றி பெரும் அணிகளுக்கிடையான போட்டிகள் பெங்களூரில் மே 27 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் தேசிய அளவிலான இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெறுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகளில் எந்த வீரரும் ஒரு அணியை உருவாக்கி பங்கேற்கலாம். 18 வயதுக்குட்பட்ட போட்டிகளில் 2004-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த வீரர்கள் இடம்பெறுவார்கள்.

மார்ச் 18 முதல் 20-ஆம் தேதி வரை பெங்களூரு கன்டீருவா உள்விளையாட்டு அரங்கின் வெளிபுறத்திலும் மற்றும் கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க கூடைப்பந்து சங்கம் மைதானங்களில். 200க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடு உள்ளன. பெங்களூரில் 120 அணிகளும், கொல்கத்தாவில் 90 க்கும் மேற்பட்ட அணிகள் விளையாட உள்ளன.இறுதிப் போட்டிகள் ஒவ்வொரு வார இறுதியில் குறைந்தது 2 அல்லது 3 நகரங்களில் நடைபெறும். தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் நடைபெறுகின்றன. தேசிய இறுதிப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப்பரிசுத் தொகை வழங்கப்படும். 3x3 போட்டிகளைத் தொடர்ந்து 5x5 போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். கூடைப்பந்து விளையாட்டை மக்களிடம் பரவலாக கொண்டு செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்றார். பேட்டியின் போது இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சந்தர் முகி ஷர்மா, 3x3 போட்டியின் மூத்த செயல் அதிகாரி பிரவீண் பாட்டீஷ் உடனிருந்தனர்.



54 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page