top of page
Search
Writer's pictureDhina mani

இந்திய கலாசாரத்தை ஊக்குவிப்பதில் ஓவியம் உள்ளிட்ட கலைகளின் பங்களிப்பு அதிகம்: எம்.எல்.ஏ சௌம்யாரெட்டி



பெங்களூரு, அக். 19: இந்திய கலாசாரத்தை ஊக்குவிப்பதில் ஓவியம் உள்ளிட்ட கலைகளின் பங்களிப்பு அதிகம் என்று எம்.எல்.ஏ சௌம்யாரெட்டி தெரிவித்தார்.

பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள பினீக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் திங்கள்கிழமை அல்கெமி ஓவியக் கண்காட்சியை தொடக்கி வைத்து அவர் பேசியது: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொடர்ந்து கலாசார மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. என்றாலும் இந்திய கலாசாரத்தை ஊக்குவிப்பதில் ஓவியம் உள்ளிட்ட கலைகளின் பங்களிப்பு அதிகம் உள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள பல ஓவியங்களில் ஆழ்ந்த கருத்துகளை எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளன. இங்கு இடம்பெற்றுள்ள ஓவியங்கள் பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது பாராட்டுதலுக்குரியது. பல்வேறு கூறுகளின் கலை அமைப்பில் சிக்கலில் எளிமை என்ற கருத்தை அனைத்து ஓவியங்களும் உள்ளடக்கி உள்ளன. அனைத்து பெரிய மாற்றங்களும் குழப்பத்திற்கு மத்தியிலேயே உருவாகி உள்ளன. இந்த கண்காட்சியின் மூலம் ஓவியக் கலைஞர்கள், இந்த குழப்பம் எப்படி மாற்றத்தின் இயற்கையான பகுதியாக உள்ளது என்பதனை விளக்குவதற்கு முயற்சி செய்துள்ளனர். இந்த அக். 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த‌ஓவியக் கண்காட்சியில் முக்கிய கலைஞர்களின் கலைப்படைப்புகளை காட்சிப்படுத்த ஒரு சரியான சூழலை ஏற்படுத்தி தந்துள்ளது என்றார். நிகழ்ச்சியில் பினிக்ஸ் கொசகு குழுமத்தின் துணைத் தலைவர் சுனைனா கோஹிலி, இ ஸ்டுடியோவின் கலை மற்றும் வடிவமைப்பின் தலைமை நிர்வாகி சோனு முல்சந்தனி, கிராமி விருது பெற்ற இசைக் கலைஞர் ரிக்கிகேஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



23 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page