பெங்களூரு, டிச. 29: கல்வியில் சிறந்து விளங்கிய ஆலன் கேரியர் மைய 2 மாணவர்கள் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) சேர்க்கை பெற உள்ளனர்.
பெங்களூரில் புதன்கிழமை கல்வியில் சிறந்து விளங்கிய அம்மையத்தின் மாணவர்களை அறிமுகம் செய்து வைத்து, அதன் தென்னிந்திய நடவடிக்கைகள் தலைவரும், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் முதுகலை வேதியியலில் தங்கப் பதக்கம் வென்றவருமான மகேஷ் யாதவ் கூறியது: 2015-ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு வழிகாட்டுதலை நோக்கமாகக் கொண்டு பெங்களூரு ஜெயநகர் சவுத்எண்ட் சர்க்கிள், எதிரில் ஆலன் கேரியர் மையத்தின் வழிகாட்டுதல் நடவடிக்கைகள் தொடங்கியது. இம்மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச ஒலிம்பியாட்ஸ், ப்ரீ-இன்ஜினியரிங் தேர்வுகள், ஐஐடி-ஜேஇஇ, ப்ரீ-மெடிக்கல், நீட், கேவிபிஒய், என்டிஎஸ்இ பயிற்சிகளும், மெரியோஷியஸ் ஸ்காலர்ஷிப் உள்ளிட்டவை பெற்றுத் தரப்படுகின்றன. இதன் மூலம் 2 சகாப்தங்களாக, உலகெங்கிலும் உள்ள 145 நாடுகளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக கல்வியில் சிறந்து விளங்கிய ஆலன் கேரியர் மையத்தைச் சேர்ந்த, பெங்களூரு கிழக்கு தில்லி பப்ளிக் பள்ளியில் படித்து வரும் அபய் பெஸ்ட்ராபலி, குமரன்ஸ், பெங்களூரு மல்லசந்திரா குமரன்ஸ் கல்விக்குழுமத்தில் படித்து வரும் மோஹித் ஹல்ஸ் ஆகியோர் உலகில் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனமானஅமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) சேர்க்கை பெற உள்ளனர். இந்த மாணவர்களின் வழிகாட்டியாகவும், குருவாகவும் நாங்கள் இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். நாட்டிற்கு முன்மாதிரி சாதனையாளர்களாக உருவெடுத்துள்ள மாணவர்களை பாராட்டி, கௌரவப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம் அவர்களின் பெற்றோர்களின் அர்ப்பணிப்பை போற்றுகிறோம் என்றார்.
Comments