பெங்களூரு, பிப். 7: மார்பகம் மற்றும் கர்ப்பையில் ஏற்படும் புற்றுநோய்க்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சைப் பெற்றால் குணப்படுத்த முடியும் என்று நியூரா மருத்துவமனை மருத்துவ இயக்குநர் தௌசிப் அகமது தங்கல்வாடி தெரிவித்தார்
இது குறித்து திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 10 மாதங்களாக நீயூரா மருத்துவமனை சார்பாக நடைபெற்ற ஆய்வில், 24 சதம் பெண்கள் மார்பகப் புற்றுநோயாலும், 20 சதம் பெண்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவது தெரியவந்தது. சர்வதேச அளவில் சுகாதாரத்துறையில் பெரும் முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாது என்ற தவறான கருத்து இந்தியர்களிடையே உள்ளது. மார்பகம் மற்றும் கர்ப்பையில் ஏற்படும் புற்றுநோய்க்கு ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சைப் பெற்றால் குணமாக்க முடியும். நீயூரா மருத்துவமனையில் கதிரியக்கவியல், பட அடிப்படையிலான தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மென்பொருள் (ஏஐ) அதிக செயல்திறன், குறைந்த அளவிலான கதிர்வீச்சு கொண்ட தொழில்நுட்பம் புற்றுநோய் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் பரிசோதனையில் துல்லியமான பாதிப்புகளை கண்டறிய முடிகிறது. இது போன்ற பரிசோதனை முறையை ஜப்பான் நாட்டில் பின்பற்றுவதால், புற்றுநோயால் இறப்பவர்களின் சதவீதம் குறைவாக உள்ளது. மார்பகம் மற்றும் கர்ப்பையில் ஏற்படும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் நீயூரா மருத்துவமனை சிறந்து விளங்குகிறது என்றார்.
Comments