பெங்களூரு, மார்ச் 8: ஆங்கர் இன்னோவேஷன்ஸ் குழுமத்தின் ஆலோசகராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்தார்.
பெங்களூரு குளோபல்மாலில் செவ்வாய்க்கிழமை ஆன்கர் குழுமத்தினர் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு மற்றும் வாழ்த்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அக்குழுமத்தின் புதிய தொழில்நுட்பத்திலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியது: ஆங்கர் உடனான எனது உறவு மிகவும் சிறப்பாக உள்ளது, மேலும் அவர்கள் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் திருப்புமுனை தீர்வுகள் மூலம் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஆவலாக உள்ளேன். ஆங்கரில் எனக்கு பிடித்த தயாரிப்பு லிபர்ட்டி ஏர்2 ப்ரோ மற்றும் லைஃப் க்யூ35 ஹெட்ஃபோன்களாகவே உள்ளது. நிகரற்ற தொழில்நுட்பத்துடன், ஆங்கர் நிறுவனம் உண்மையிலேயே அதன் முத்திரையைப் பதித்து வருகிறது. சிறப்பு வாய்ந்த ஆங்கர் இன்னோவேஷன்ஸ் குழுமத்தின் ஆலோசகராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஆங்கர் குழுமம் முன்னிலை வகிக்கிறது. சார்ஜிங்கில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் தீர்வுகளை வழங்குகிறது. அவர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் உபகரணங்களுக்கு 18 மாத உத்தரவாதத்தை வழங்குவது வாடிக்கையாளர்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
பின்னர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கர் தயாரிப்புகளின் முதல் அனுபவத்தைப் பெற குளோபல் மால்ஸில் உள்ள லுலு இணைப்புக் கடையையும் அவர் பார்வையிட்டார்.
ஆங்கர் இந்தியாவின் சந்தைப்படுத்தல் தலைவர் ஹரிஷ் கொமராலா கூறியது: நாங்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் முன்னோக்கிச் செல்வதிலும், நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம். இன்று, இந்த பிராண்டை உருவாக்குவதற்கான எங்கள் லட்சியங்களைப் பற்றி விவாதிக்கும்போது, வாஷிங்டன் சுந்தருடனான இந்த சந்திப்பையும் வாழ்த்துக்களையும் எங்களால் மறக்க முடியாது. இதற்காக அவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்தியாவின் மிகவும் நம்பகமான எலக்ட்ரானிக்ஸ் பிராண்டாக ஆங்கரின் தயாரிப்புகள் உள்ளன என்றார்.
நிகழ்வில் ஆங்கர் குழுமத்தின் தயாரிப்புகள் லிபர்ட்டி ஏர் 2 புரோ (Liberty Air2 Pro), லைப் க்யூ35 (Life Q35) ஹெட்ஃபோன்கள், 20 வாட் சார்ஜர் (20W charger) மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஈயூபை எக்ஸ்8 ரோபோவாக் (Eufy X8 Robovac) மற்றும் நெபுலா புரொஜெக்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
Comments