அர்ஜுனவாரா ஆபரண மாளிகையில் முதலாமாண்டு கொண்டாட்டம்: நடிகர் சுதீப், எம்.எல்.ஏ சௌம்யாரெட்டி பங்கேற்பு
- Dhina mani
- Oct 24, 2021
- 1 min read
பெங்களூரு, அக். 24: அர்ஜுனவாரா ஆபரண மாளிகையில் முதலாமாண்டு கொண்டாட்டத்தில் நடிகர் சுதீப், எம்.எல்.ஏ சௌம்யாரெட்டி பங்கேற்றனர்.
பெங்களூரு ஜெயநகர் 4-வது டி பிளாக்கில் உள்ள அர்ஜுனவாரா ஆபரண மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை முதலாமாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சுதீப், எம்.எல்.ஏ சௌம்யாரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுனவாரா இணை நிறுவனர் ராகுல்ஜெயின், கடந்த 60 ஆண்டுகளாக தங்கள், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரண விற்பனையில் சிறந்து விளங்கும் அர்ஜுனவாரா, தனிக்கென்றே தனித்துவமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதன் காரணமாக கரோனா தொற்றின் போதும், எங்கள் வர்த்தகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெங்களூரில் நன்மதிப்பை பெற்றுள்ள எங்கள் குழுமம் அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றார்.
நடிகர் சுதீப் பேசியது: பெங்களூரு ஜெயநகரில் கடந்த ஆண்டு அர்ஜுனவாரா ஆபரண மாளிகை தொடங்கியதிலிருந்தே எங்கள் குடும்பத்தினர் அங்கு ஆபரணங்களை வாங்குவதனை வழக்கமாக கொண்டுள்ளனர். 2020-21-ஆம் ஆண்டுக்கான கைவினைக்கான தேசிய விருதை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற பெருமைக்குரிய விருதுகளை அக்குழுமம் தொடர்ந்து பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

Comments