பெங்களூரு, அக்.1: இந்தியாவில் பொழுதுபோக்கு சந்தையை உருவாக்குவதற்கான முதல் படி பிரைம் வீடியோ சேனல்களை அமேசான் பிரைம் வீடியோ அறிமுகம் செய்துள்ளது.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை இந்தியாவில் பொழுதுபோக்கு சந்தையை
உருவாக்குவதற்கான முதல் படி பிரைம் வீடியோ சேனல்களை அமேசான் பிரைம் வீடியோ சார்பில் அறிமுகம் செய்து வைத்த அமேசான் பிரைம் வீடியோ சேனல்களின் தலைவர் சைதன்யா திவான் கூறியது: இந்தியாவில் பிரைம் வீடியோ சேனல்கள் செப். 24-ஆம் தொடங்கப்பட்டுள்ளது. பிரைம் வீடியோ சேனல்கள் பிரைம் உறுப்பினர்களுக்கு தடையற்ற அனுபவத்தையும் பல்வேறு பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளின் தனித்துவமான உள்ளடக்கத்திற்கான அணுகலையும் வழங்கும். வாடிக்கையாளர்களுக்குத் தொந்தரவு இல்லாத பொழுதுபோக்கு அனுபவம்,எளிமைப் படுத்தப்பட்ட கண்டுபிடிப்பு, வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளிலிருந்து பரந்த அளவிலான பிரீமியம் உள்ளடக்கத்திற்கான வசதியான அணுகலை வழங்குகிறது. லயன்ஸ்கேட் ப்ளே, ஈரோஸ் நவ், டொகுபே, முபி, ஹோய்சோய், மனோரமா மேக்ஸ், ஷார்ட்ஸ் டிவி - இந்தியாவில் பிரதம உறுப்பினர்களுக்கு கூடுதல் சந்தாக்களுடன் கிடைக்கிறது. பிரைம் வீடியோ சேனல்களின் அறிமுகம் அமேசான் பிரைம் வீடியோவை இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு இடமாக மாற்றுவதற்கான மற்றொரு படியாகும் என்றார்.
Comments