top of page
Search

அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை

  • Writer: Dhina mani
    Dhina mani
  • Nov 26, 2021
  • 1 min read

பெங்களூரு, நவ. 25: அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெங்களூரில் 5 கி. மீ சுற்றவில் இந்த சேவை கிடைக்கிறது. 24 மணி நேரத்தில் 1066 என்ற தொலைபேசி எண்ணில் அழைப்பதன் மூலம் எந்த நேரத்திலும் ஆம்புலன்ஸ் சேவைக் கிடைக்கும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் டெடிகேட்டட் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சிஸ்டத்தை (ERS) மூலம்1066-ஐ அழைத்தால். மேம்பட்ட GPRS மூலம் அவசர உபகரணங்களுடன் பயிற்சி பெற்ற துணை மருத்துவர்களை உள்ளடக்கிய ஆம்புலன்ஸ் உடனடியாக அழைப்பு வந்த இடத்திற்கு வரும். ஆம்புலன்ஸ் சேவை உரிய நேரத்தில் கிடைக்காவிட்டால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவசரநிலை ஏற்பட்டால், நோயாளி மரணத்திற்கு எதிராக போராடுவார். எனவே, இந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் சரியாக நிறுத்தப்பட்டாவிட்டால் நோயாளி உயிரிழக்க வாய்ப்புள்ளது. மரணம் மற்றும் ஊனத்தை தடுக்கும் வகையில் கோல்டன் ஹவரில் மருத்துவ உதவி பெற ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. GPRS இயக்கப்பட்ட கண்காணிப்பு அப்பல்லோ அவசரக் குழுவிற்கு நோயாளி வருகை பற்றிய துல்லியமான தகவலை வழங்கும். கோல்டன் ஹவர்ஸ் நோயாளியைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவும். பெரும்பாலான அவசரகால நிகழ்வுகளில் அப்பல்லோ எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் புரோட்டோகால் முக்கிய பங்கு வகிக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
 
 

Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Bangalore Dhinamani Daily. Proudly created with Wix.com

bottom of page